Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

சீரகத்தின் மருத்துவ பயன்கள் மற்றும் நன்மைகள்


சீரகம்

சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. தமிழகத்தில் மேடுப்பாங்கான இடங்களிலும் மலைப்பகுதிகளிலும் பயிர்செய்யப்படுகிறது. சீரக செடியின்  காய்ந்த விதைகளே சீரகம் எனப்படும்.



சீர்+அகம் = சீரகம், அகத்தை சீர் செய்வதால் இதற்க்கு சீரகம் என பெயர் வந்தது. இது வயிற்றுப்பகுதி உறுப்புகளை சீரமைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. சிறிது கார்ப்பு, மற்றும் இனிப்பு சுவை கொண்டது. குளிர்ச்சித்தன்மை கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத் தன்மைக்காக உணவுப்பொருட்களில் அதிகம் சேர்க்கப்படுகிறது. நம் வீடுகளில் சமைக்கப்படும் பெரும்பாலான உணவுகளில் சீரகம் கட்டாயம் இடம் பெற்றிருக்கும்.

சீரகத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்

100 கிராம் சீரகத்தில் உடலுக்கு தேவையான பல பொருட்கள் அடங்கியுள்ளது. சீரகத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் பி, வைட்டமின் ஈ புரதச்சத்து, நார்ச்சத்து, நிறைவுறு கொழுப்பு போன்றவை மிகுதியான அளவில் உள்ளன.

சீரக எண்ணெய்

சீரகத்திலிருந்து 56% Hydrocarbons ,Terpene,Thymol போன்ற எண்ணெய்ப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதில் Thymol வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கவும், கிருமி நாசினியாகவும் பல மருந்துக்கம்பனிகளின் மருந்துகளில் சேர்க்கபட்டு பயன்படுத்தப்படுகிறது.

சீரகத்தின் மருத்துவ பயன்கள்

ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வந்தால் முகம், தலைமுடி பொலிவு பெரும். மேலும் உடல் ஆரோக்கியமும் மேம்படும். மேலும் பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு இயற்கை தீர்வாக அமைகிறது.

செரிமானத்தை மேம்படுத்தும்

தண்ணீரில் சிறிது சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை குடித்து வருவது வயிற்றுக்கு மிகவும்  நல்லது. இந்த தண்ணீர் அஜீரணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். வயிற்று வலிக்கும் சிறந்த தீர்வு தரும். கர்ப்பிணி பெண்கள் சீரக நீர் பருகி வந்தால் கர்ப்பகாலத்தில் செரிமானத்தை மேம்படுத்தும், மேலும்  கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளின் செரிமான நொதிகளைத் தூண்டும். பால் சுரப்பை அதிகரிக்கும். சீரகத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவும்.

நோய் எதிர்பாற்றல் அதிகரிக்கும்

நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சீரகம் கலந்த நீர் குடிக்க வேண்டியது அவசியம். இது உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க உதவும். மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும். சீரக நீர் சுவாச கட்டமைப்புக்கும் நன்மை சேர்க்கும். சளியை குணப்படுத்தும் உதவும்.

 இரத்த அழுத்தம் சீராகும்

உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் சீரக நீரை குடித்தால் அதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக  வைத்திருக்க உதவும். ஏனெனில் சீரகத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. அது உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கும் உதவும். உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும், மேலும் பித்தப்பைக்கும் பாதுகாப்பு அளிக்கும்.  கல்லீரலும் பலம் பெறும்.

இரும்பு சத்து அதிகரிக்கும்

உடல் ஆரோக்கியத்துக்கு இரும்பு சத்து என்பது மிகவும் அவசியம். இரும்பு சத்து குறைபாட்டை சீரக நீர் சரி செய்யும். மாதவிடாய் கால வலியை குறைக்கும். சரும பளபளப்புக்கும் சீரக நீரை பயன்படுத்தலாம். அதில்  பொட்டாசியம் மட்டுமின்றி கால்சியம், செலினியம், மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. அவை தோலுக்கு புத்துணர்ச்சி  கொடுக்கும்.

சுவாச பிரச்சனைகள் சீராகும்

சீரகத்தில் உள்ள இரும்பு சத்தானது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினின் அளவை அதிகரித்து இரத்தசோகையை குணப்படுத்தும். சளி பிரச்சனை, சுவாசக் குழாயில் உள்ள நோய்க் கிருமிகள் அழித்து சளி மற்றும் இருமல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்கும். இதனால் சுவாசம் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். சீராக நீரைக் தொடர்ந்து குடித்து வந்தால் ஞாபக சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

முகம் பொலிவு பெரும்

சீரக நீருடன் மஞ்சள் தூளை கலந்து முகத்தை கழுவினால், முகம் பளபளக்கும். சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் மாறும். சீரகத்தில் உள்ள வைட்டமின் ஈ சத்தானது இளமையை தக்கவைக்க உதவும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கூந்தலை வலுவாக்குவதோடு, தலைமுடியின் வேர்களுக்கு  வளர்வதற்கு ஊட்டச்சத்தை அளிக்கும்.

மனநோய் குணமாகும்

திராட்சை பழச்சாறுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தம் கட்டுப்படும். அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் மனநோய், புத்திபெதலித்தல் போன்றவை குணமாகும்.

பித்தம் குறையும்

நீர்மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும். சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்து பின்பு தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால், பித்தம் குணமாகும்.



உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும்

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடி செய்துத் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்யும். உடலுக்கு குளிர்ச்சியை தரும் மற்றும் உடலை பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.

பேதி குணமாகும்

சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு மிளகு சேர்த்து மென்று தின்று வர, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப்பொருமல் போய்விடும். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து சாப்பிட்டால், அதிக பேதி நிற்கும்.

தலைசுற்றல் நிற்கும்

செரிமானம், வாயுத் தொல்லை போன்றவைகளுக்கு சீரகம் ஒரு மாமருந்து. சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்றல் குணமாகும்.

சீரகம் சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் சீரகம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.


This post first appeared on Exprestamil, please read the originial post: here

Share the post

சீரகத்தின் மருத்துவ பயன்கள் மற்றும் நன்மைகள்

×

Subscribe to Exprestamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×