Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

சாரபருப்பை சாப்பிடுவதால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா


சாரைப்பருப்பு

சாரை பருப்பு இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. இதன் ஓடு கடினமாகவும், உள்ளே உள்ள பருப்பு மென்மையாகவும் இருக்கும். சாரபருப்பு பயரின் அளவு சற்று தட்டையானது மற்றும் பாதாம் போன்ற சுவை கொண்டது. இவற்றை பச்சையாகவே சாப்பிடலாம் என்றாலும், அவை பெரும்பாலும் உணவின் சுவையை அதிகபடுத்துவதால் அவை பெரும்பாலும் வறுக்கப்படுகின்றன. அல்வா, பாயசம், மைசூர் பாக் போன்ற இனிப்பு வகைகளில் சாரைப் பருப்பு சேர்க்கப்படுகிறது.



சாரைப் பருப்பில் உள்ள ஊட்டசத்துக்கள்

சார பருப்பில் புரதம், கொழுப்பு, கால்சியம், நார்ச் சத்து, இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீஷியம், தாமிரம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. மிதமான அளவு மாவுச் சத்தும் குறைந்த அளவு ஆக்சாலிக் அமிலமும் இருக்கிறது. மேலும் வைட்டமின் சி, வைட்டமின் பி 1 மற்றும் பி 2 உள்ளிட்ட பல அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.

சாரைபருப்பின் ஆரோக்கிய நன்மைகள்

சருமத்தை பாதுகாக்கும்

சாரபருப்பு ஃபேஸ் பேக் தயாரிக்க நசுக்கப்பட்டு பாலுடன் கலக்கப்படுகிறது, இது சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும். மேலும் அது சருமத்திற்கும் கூந்தலுக்கும் நன்மை பயக்கும். மேலும் க்ளீட் போன்ற பல பிறப்புறுப்பு மற்றும் சிறுநீர் பிரச்சினைகளுக்கு அவை பயனுள்ளதாக இருக்கும்.

உடலை குளிர்ச்சியாக்கும்

சாரபருப்பு குளிர்ச்சி தன்மை கொண்டது. இந்த பருப்பு இயற்கையாகவே உடல் வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். ஆயுர்வேத மருந்துகளில், சாரபருப்பு பெரும்பாலும் சருமத்தில் அரிப்பு, வேர்க்குரு போன்ற சரும சிகிச்சையளிப்பதற்கான தயாரிப்புகளில் சேர்க்கப்படுகிறது.

தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

சாரபருப்புலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கிறது மற்றும் கருமையான புள்ளிகள் மற்றும் கறைகளை நீக்க உதவுகிறது. சாரபருப்பை மாவு, தயிர், தேன் மற்றும் எலுமிச்சை, அல்லது ரோஸ் வாட்டர் மற்றும் முல்தானி மெட்டி போன்றவற்றில் சேர்த்து ஸ்க்ரப்களை உருவாக்குகின்றனர். இந்த ஸ்க்ரப்கள் சருமத்தை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாத்து முகப்பருவைத் தடுக்கின்றன.

செரிமானத்தை மேம்படுத்துகிறது

சாரபருப்பு குடல் இயக்கங்களை முறைப்படுத்த உதவும். இது மலச்சிக்கல்  ஏற்படாமல் தடுக்கிறது. வயிற்றுப்போக்கை குணப்படுத்துகிறது. வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.

பாலுணர்வை தூண்டும்

சாரபருப்பு ஒரு சிறந்த பாலுணர்வாக தூண்டியாக கருதப்படுகிறது, மேலும் இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. விந்தணு மற்றும் பாலியலில் வீரியத்தை மேம்படுத்தகிறது.



உடல் எடையை குறைக்கும்

சாரபருப்பில் கலோரிகள் குறைவாக உள்ளன, ஆனால் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இது உங்களுக்கு அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும். இதனால் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றாது.

பால் சுரப்பை அதிகபடுத்தும்

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், எடை கூட நினைப்பவர்கள் தினமும் 10 முதல் 15 கிராம் சாரபருப்பு சாப்பிடலாம். அதிக எடை, கொழுப்பு உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.


This post first appeared on Exprestamil, please read the originial post: here

Share the post

சாரபருப்பை சாப்பிடுவதால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா

×

Subscribe to Exprestamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×