Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ஓட்ஸ் உணவின் பயன்கள்


ஓட்ஸ்

ஓட்ஸ் என்பது உடல் நலத்தை மேம்படுத்தும் மிகச்சிறந்த முழு தானிய உணவாக விளங்குகிறது. மேலும் உடல்நலத்திற்கு தேவையான ஃபைட்டோ-நியூட்ரியன்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருட்கள் இதில் உள்ளன. ஓட்ஸ் உணவின் உடல்நல பயன்களை மேம்படுத்த நட்ஸ், பழங்கள், காய்கறிகள் மற்றும் மசாலாக்களை அதில் சேர்த்துக் கொள்ளலாம். நீரிழிவு நோயினை கட்டுப்படுத்தவும் உடல் எடையை குறைக்கவும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் ஒரு உணவு ஓட்ஸ் ஆகும்.


அரிசி, கோதுமை போன்று ரஷ்யா, அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் ஓட்ஸ் அதிகம் விளைவிக்கப்படுகிறது. தற்போது மக்களிடையே ஓட்ஸின் பயன்பாடானது கணிசமாக அதிகரித்துள்ளது.

ஓட்ஸ்-ல் அடங்கியுள்ள ஊட்டசத்துகள்

ஓட்சில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், செலீனியம், ஃபோலேட், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், விட்டமின் பி6, பி1, பி2, இரும்பு, புரதம், நார் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

ஓட்ஸ்ன் மருத்துவ பயன்கள்

புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது

ஒட்ஸ் சாப்பிடுவதால் டைப்2 நீரிழிவு நோயானது கட்டுப்படுத்தப்படுகிறது. ஓட்ஸில் உள்ள பைட்டோ கெமிக்கலானது ஹார்மோன் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பினை தடுக்கிறது. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் வருவதை தடுக்கிறது.

நார்ச்சத்து மிகுந்தது

ஓட்ஸ்ல் அதிக அளவு நார்சத்து நிரம்பியுள்ளது. இந்த நார்சத்து உணவை சுலபமாக செரிமானம் செய்ய உதவுவதோடு, குடலில் புண்கள் மற்றும் மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. வாரத்திற்கு ஒரு முறையாவது ஓட்ஸ் கஞ்சி, ஓட்ஸ் கூழ் போன்றவற்றை செய்து சாப்பிட்டு வருவது வயிற்றில் இருக்கும் நச்சுகள் வெளியேற செய்யும்.

மலசிக்கல் தீரும்

கெட்ட கொழுப்பு கரைக்கப்படுவதால் இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு  தடுக்கப்பட்டு மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மலச்சிக்கல் உண்டாவது தடுக்கப்படுகிறது, மேலும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

உடல் எடை குறையும்

உடல் எடை குறைப்பதற்கு சிறப்பான, ஒரு உணவு ஓட்ஸ். ஓட்ஸில் நார்ச்சத்து மற்றும் கெட்ட கொழுப்பை கரைக்கக்கூடிய வேதிப்பொருட்கள் அதிகம் நிறைந்துள்ளது. தினந்தோறும் காலை உணவாக ஓட்ஸ் கஞ்சி, ஓட்ஸ் கூழ் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். ஓட்ஸ் நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் கொழுப்பை உடலில் சேர விடாமல் தடுக்கிறது.

மன அழுத்தம் சரியாகும்


ரத்த அழுத்தம் சராசரி நிலையை விட அதிகமாக இருப்பவர்களுக்கு ஹைப்பர்டென்ஷன் எனப்படும் மனஅழுத்தம் உண்டாகிறது. ஓட்ஸ் உணவில் இந்த மன அழுத்த நிலையை குறைப்பதற்கான வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளன. ஓட்ஸ் உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.


மாதவிடாய் வலி குறையும்

மாதவிடாய் காலங்களில் அதிக உதிரப்போக்கு மற்றும் வயிற்றுவலி காரணமாக பெண்கள் சிலர் உடல்ரீதியாக பலமிழந்து காணப்படுவார்கள். இவர்கள் ஓட்ஸ் மூலம் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வர அவர்களின்  உடல்சோர்வு நீங்கும். அடிவயிற்று வலியும் குறையும்.



தூக்கமின்மை பிரச்சனை சரியாகும்

தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஓட்ஸ் கொண்டு செய்யபட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்லது. ஓட்ஸில் ட்ரிப்டோபான் எனப்படும் வேதிபொருள் நிறைந்திருக்கிறது. இது நரம்புகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கங்களை தளர்த்தி, ஆழ்ந்த தூக்கத்தை தருகிறது.

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்கும்

ஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், உணவுகளை உடல் மெதுவாக செரிக்க செய்யும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு திடீரென உயராது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

ஓட்ஸில் ‘பீட்டா குளுக்கன்’ என்கிற வேதி பொருள் மற்ற எந்த ஒரு உணவையும் விட அதிகளவு நிறைந்திருக்கிறது. இந்த பீட்டா குளுக்கன் உடலில் இருக்கும் நிண நீர் சுரப்பிகளை பலப்படுத்தி தொற்று நோய்கள், தொற்று கிருமிகள் மூலம் ஏற்படக்கூடிய நோய்கள் ஆகியவற்றிலிருந்து உடலை பாதுகாக்கிறது.


This post first appeared on Exprestamil, please read the originial post: here

Share the post

ஓட்ஸ் உணவின் பயன்கள்

×

Subscribe to Exprestamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×