Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

துவரம் பருப்பின் பயன்கள் மற்றும் நன்மைகள்


துவரம் பருப்பு

தென்னிந்திய சைவ சமையலில் சாம்பாருக்கு முக்கிய இடம் உண்டு. சாம்பார் என்றாலே நம் நினைவுக்கு வருவது சாம்பார்தான். சாம்பாரின் பிரதானமே துவரம் பருப்புதான். சாம்பார், பருப்பு சோறு, அரிசி பருப்பு சாதம் தொடங்கிப் பல உணவுப் பண்டங்கள் இதை அடிப்படையாகக் கொண்டு தயார் செய்யப்படுகின்றன. துவரம் பருப்பு உடலுக்குச் சரிவிகித உணவைத் தருவதோடு புரதசத்து , வைட்டமின் சி சத்து, அமினோ அமிலம், நார்ச்சத்து போன்றவை அதிகமாக உள்ளன. இந்த துவரம் பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ ரீதியான பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உடல் எடை அதிகமாக
ஒரு சிலர் உடலில் அதிக சதைப்பற்று இல்லாமல் மிகவும் மெலிந்த தேகம் கொண்டிருப்பர். இவர்களின் இளைத்த உடல் பெருக்க துவரம்பருப்பை பசு வெண்ணெய் விட்டு வதக்கி, அரிசி சாதம் சாப்பிடும் போது இந்த கலவையுடன் பசுவின் நெய்யை கலந்து சாப்பிடுவதால் மெலிந்த தேகம் கொண்டவர்கள் உடலில் சதைபிடிப்பு உண்டாகும். உடலுக்கு வலிமை கிடைக்கும்.

இரத்த அழுத்தம் சீராக

நடுத்தர வயதை தாண்டிவிட்டாலே பெரும்பாலானவர்களுக்கு ரத்த அழுத்தம் ஒரு முக்கிய பிரச்சனையாக உருவெடுக்கிறது. துவரம் பருப்பில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. இது இரத்த ஓட்டத்தை சீராக நடைபெறச் செய்கிறது. இதனால் இரத்த அழுத்தம் குறைந்து, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுகிறது. எனவே ரத்த அழுத்த பிரச்சனை தீர அடிக்கடி உணவில் துவரம் பருப்பை சேர்த்து கொள்வது அவசியம்.

ஆரோக்கியமான வளர்ச்சி

உடலில் தசைகளின் வலுவிற்கும், வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும். துவரம் பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. புரதமானது செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். எனவே குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் துவரம் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

காயங்கள் விரைவாக குணமாகும்

நாம் வேலை செய்யும் போதும், விளையாடும் போதும் அடிபட்டு காயங்கள், புண்கள் ஏற்படுவது மிகவும் சகஜம். இத்தகைய காயங்கள் வெகு விரைவில் ஆறுவதற்கு புரத சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும். காயங்களை விரைந்து ஆற்றவும், செல்களின் மறுவளர்ச்சிக்கும் புரதச்சத்து அவசியமானது. எனவே துவரம் பருப்புகளை அடிக்கடி சாப்பிடுவதால் காயங்கள் விரைவில் குணமாகும்.

ரத்த சோகை சரியாக

ரத்தத்தில் ஃபோலேட்டுகளின் குறைபாட்டினால் ரத்த சோகை நோய் ஏற்படுகிறது. துவரம் பருப்பில் போதுமான அளவு ஃபோலேட்டுகள் உள்ளன. எனவே ரத்த சோகை நோய்க்கு துவரம் பருப்பு ஒரு உணவாகும்.

வீக்கம், அழற்சியை குறைக்க

சிலருக்கு அடிபடும் போது உடலில் அடிபட்ட பகுதிகளில் வீக்கம் ஏற்படுகின்றன. இது மேலும் தீவிரமடைந்து உடல் அழற்சியும் ஏற்படுகிறது. துவரையில் உள்ள கனிமச்சத்துக்கள் வீக்கத்தைக் வேகமாக குறைப்பதோடு அழற்சி தன்மையையும் குறைக்கிறது. மேலும் அடிபட்ட இடத்தில் உண்டாகும் வீக்கம் மற்றும் இரத்தகட்டிற்கு துவரம் பருப்பை அரைத்துப் போடுவதால் வீக்கம் விரைவில் குறையும்.

நோய் எதிர்ப்பு ஆற்றல் பெருகும்

நோய்கள் நம்மை தாக்காமல் இருக்க நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும். துவரையில் உள்ள வைட்டமின் சி’ சத்தானது, உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. இது இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, ஆன்டிஆக்ஸிஜன்டாக செயல்பட்டு உடல்நலத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்பாற்றலையும் அதிகரிக்கிறது.

இதய நலம் மேம்படும்

உலகெங்கிலும் இதயம் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. துவரம் பருப்பில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, கொழுப்புச்சத்து ஆகியவை இதயத்தின் ஆரோக்கியத்தை  மேம்படுத்துகிறது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீர் செய்கிறது. எனவே துவரம் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் இதய நலம் மேம்பட்டு, ஆயுள் அதிகரிக்க்கும்.

செரிமான சக்தி அதிகரிக்கும்

துவரம் பருப்பில் உள்ள நார்ச்சத்து உணவை நன்கு செரிமானம் செய்ய உதவுகிறது. மேலும் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி வெளியேற்றவும் நார்ச்சத்து உதவுகிறது. வயிற்றுப்போக்கு, வாந்தி, மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமல் துவரம் பருப்பு நம்மை காக்கிறது.


This post first appeared on Exprestamil, please read the originial post: here

Share the post

துவரம் பருப்பின் பயன்கள் மற்றும் நன்மைகள்

×

Subscribe to Exprestamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×