Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

சத்குரு காட்டை அழித்தாரா..... உண்மை அறிவோம்!

ஈஷா யோகா மீது பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இருப்பினும் அவை அனைத்தும் உண்மையற்றவை என்று ஈஷா யோக நிறுவனம் திரும்ப திரும்ப பலமுறை தம் கருத்தை சொல்லி வருகிறது. அப்படி சொன்னபோதிலும் பல வதந்திகள் இன்னமும் ஈஷா மீது சுமத்தப்பட்டு தான் வருகிறது. அதற்கு இணங்க ஈஷா யோக மையம் அனைவருக்கும் உண்மை அறியும் படி ஆதாரங்களை கீழ்கண்டவாறு வழங்கி உள்ளது.


ஈஷா யோக மையம் காடுகளை ஆக்கிரமித்து உள்ளதா?

ஈஷா யோகா மையம் காடுகளை ஆக்கிரமிக்கவில்லை, அது முழுக்க முழுக்க 100% பட்டா நிலம் ஆகும்.

ஆதாரம் 1:
2013ஆம் ஆண்டில் தமிழ்நாடு forest டிபார்ட்மென்ட அதிகாரிகள் ஈஷாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் விதமாக கீழ்கண்ட ஆவணத்தை சமர்ப்பித்துள்ளது. இதன் மூலமாக ஈஷா யோக மையம் பட்டா நிலத்தில் தான் உள்ளது மற்றும் அது காடுகளில் கட்டமைக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. ஆவணத்தின் Reference நம்பர் CFCIT/07/2013.


ஈஷா யோக மையம் யானை வழித்தடத்தில் உள்ளதா?

ஈஷா யோக மையம் யானை வழித்தடத்தில் இல்லை.

தமிழ்நாடு Forest Department ஈஷா யோகா மையம் அமைந்திருக்கும் இடத்தில் துளி அளவுகூட யானை வழித்தடம் இல்லை என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி யானை வழித்தடம் ஈஷா யோக மையம் அமைந்திருக்கும் மொத்த மாவட்டத்திலேயே இல்லை என்றும் அறிவித்துள்ளது. 2013இல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இதனை இரட்டிப்பு முறை உறுதிப்படுத்தியுள்ளது ஈஷா யோகா மையம்.



ஈஷா யோக மையத்தின் அருகில் உள்ள யானை வழித்தடம் என்று ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட் அறிவித்திருப்பது நீலகிரி மாவட்டத்தின் தொடர்ச்சி மலையில் உள்ளது. தமிழ்நாட்டு Forest Department ஆய்வு வல்லுநர்களைக் கொண்டு இணையதளத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது அதன்படி ஐந்து யானை வழித்தடம் தமிழ்நாட்டில் உள்ளது. அவை நீலகிரி மலைத் தொடர்ச்சியில் உள்ள சேகுவர் மேட்டுநிலம்: சிங்கார மசினகுடி, செம்ம நத்தம் Mavinhalla, புக்கபுறம் Mavinhalla, Glencorin மற்றும் வால்தோட்டம். இந்த ஐந்து வழித்தடமும் நீலகிரி மாவட்டத்தில் தான் உள்ளது ( ஈஷா யோக மையம் அமைந்துள்ள ) கோயம்புத்தூரில் இல்லை.

ஆதாரம் 2:
கூட்டுறவு சுற்றுச்சூழல மற்றும் காடுகள் அமைச்சகம் யானை வழித்தடம் எது என நிர்ணயித்துள்ளது. ஈஷா மையம் இந்த நிர்ணயித்துள்ள இடத்திலும் வரவில்லை.

2010ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் அமைச்சகத்தின் யானை ஆய்வாளர்கள் ஆராய்ச்சியின் படி வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல் 10 முக்கியத்துவம் வாய்ந்த யானை வழித்தடங்கள் மற்றும் இரண்டாம் முக்கியத்துவம் வாய்ந்த 10 யானை வழித்தடங்கள் தென்னிந்தியாவில் எதுவென அறிவித்துள்ளது. ஈஷா யோக மையம் இந்த எல்லையில் எங்கும் இடம்பெறவில்லை.

ஆதாரம் 3
Wildlife Trust of India யானை வழித்தடம் எதுவென அங்கீகரித்துள்ளது. ஈஷா யோக மையம் இந்த வழித்தடங்களிலும் அமையப் பெறவில்லை.

2005இல் Wildlife Trust of India (WTI) (இது ஒரு இந்தியாவின் முன்னணி இயற்கை பாதுகாப்பு நிர்வாகம் ஆகும்), மற்றும் ஆசியாவின் இயற்கை பாதுகாப்பு நிர்வாகம் (ANCF), மாநில ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட் project மற்றும் பல ஆராய்ச்சியாளர்கள் ஒருங்கிணைந்து வெளியிட்டுள்ள முதல் வெளியீடு "வழித்தடத்தின் உரிமை: இந்தியாவின் யானை வழித்தடங்கள்" (Right of passage:  Elephant corridors of India), இது மொத்தம் 88 யானை வழித்தடங்கள் இந்தியாவில் இருப்பதாக அறிவித்துள்ளது. 2017இல் இரண்டாவது வெளியீட்டில் 101 யானை வழித்தடங்கள் இருப்பதாக வெளியிடப்பட்டுள்ளது. ஈஷா யோகா மையம் இதில் வெளியிடப்பட்டுள்ள 101 யானை வழித்தடங்களிலும் இல்லை.

இந்த ஆய்வு அறிக்கை யானை வழித்தடங்கள் இந்தியாவில் எங்கெங்கு உள்ளது என்பதை பற்றின ஒரு மிக விரிவான ஆய்வு அறிக்கையாகும். இதில் குறிக்க வேண்டியது, இந்த யானை வழித்தடங்கள் அரசு அதிகாரப்பூர்வமாக கூட அடையாளப்படுத்தவில்லை ஆனால் முக்கியமான யானை வழித்தடங்களாக மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எல்லா வெளியீடுகளையும் இணையதளத்தில் எளிமையாக யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக எப்போதும் உள்ளது.

பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக ஈஷா யோக மையம் Wildlife Tust of India அறிக்கைப்படி வெளியிடப்பட்டுள்ள இரண்டு முக்கியமான மேப்பை கீழ்கண்டவாறு வழங்கியுள்ளது. ஈஷா யோக மையம் இந்த மேப்பில் இல்லாததையும் மற்றும் இந்த இடங்களுக்கு சுற்றுவட்டாரத்தின் அருகில் எங்குமே இல்லாததையும் நீங்களே பார்க்கலாம்.



இந்த ரிப்போர்ட் ஈஷாவில் பிரச்சனைக்குரிய கட்டிடம் எதுவும் இல்லை என்பதையும் நிரூபித்துள்ளது.
இந்த ஆய்வு அறிக்கை பிரைவேட் நிலம், கிராம மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டிடங்கள் இருக்குமிடம் மற்றும் அருகிலுள்ள யானை வழித்தடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்ததில் ஈஷா யோக மையம் அல்லது ஈஷா யோகா சம்பந்தப்பட்ட கட்டிடங்கள் எதுவுமே இங்கு இல்லை என்பதை வெளியிட்டுள்ளது.

ஆதாரம் 4
WWF யானை வழித்தடம் எதுவென அங்கீகரித்துள்ளது. இதற்கு அருகிலும் ஈஷா யோக மையம் வரவில்லை.
WWF, யானை வழித்தடம் எதுவென ஒரு ரிப்போர்ட proposal செய்துள்ளது. அதில் ஈஷா யோக மையம் இடம்பெறவில்லை.

யானை வழித்தடம் என்றால் என்ன?
Wild life trust of India ஒரு ரிப்போர்ட்டில் சொல்கிறது “ பொதுவாகவே யானை வழித்தடம் என்றால் என்ன என்பதிலேயே பலருக்கு ஒரு தெளிவு இல்லை, இதனால் பலர் யானை வாழும் இடங்களை யானை வழித்தடங்களாக தவறாக புரிந்து கொள்கின்றனர்.”
அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் யானை இருக்கும் இடங்கள் அவை வாழும் இடங்கள் எல்லாம் யானை வழித்தடங்கள் என புரிந்து கொள்ளக் கூடாது. யானை வழித்தடம் என்பது 100 மீட்டரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் வரை அகலத்தில் இருக்கும் ஒரு நீண்ட குறுகலான பாதை மட்டுமே. இந்த பாதை தான் யானை ஒரு இடம் விட்டு இன்னொரு இடத்திற்கு தங்குவதற்கு நெடுந்தூரம் பயணம் செய்யும் பாதைகள் ஆகும். யானை தங்குவதற்கு குறிப்பிட்ட காலம் சில இடங்களில் செலவு செய்கிறது அதை யானை வழித்தடங்கள் என்று கொள்ளலாகாது.
யானை வழித்தடங்கள் என அதிகாரப்பூர்வமாக முறையாக அறிவிக்கப்படுவது இந்த நீண்ட நெடிய குறுகலான நில தடங்கள் தான் அவை பொது நிலம் அல்லது குறிப்பிட்ட ஒரு பரவலான நிலப்பரப்பு கிடையாது.
முடிவாக Wildlife Trust of India அல்லது தமிழ்நாட்டு Forest டிபார்ட்மென்ட் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின்படி ஈஷா யோக மையம் காடுகளை ஆக்கிரமித்து அல்லது யானை வழித்தடங்களை மறித்து அமையப் பெறவில்லை என்பதை உறுதி செய்துள்ளது.







This post first appeared on Gift Ideas For My Friend's Wedding, please read the originial post: here

Share the post

சத்குரு காட்டை அழித்தாரா..... உண்மை அறிவோம்!

×

Subscribe to Gift Ideas For My Friend's Wedding

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×