Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

கோடையை குழந்தைகளோடு கொண்டாடலாம் இப்படி!

*கோடையை குழந்தைகளோடு கொண்டாடலாம் இப்படி!*
– விழியன்

கோடை வந்தாலே குழந்தை களுக்கு கொண்டாட்டம். ஆனால் அய்யய்யோ கோடை
விடுமுறை வந்துவிட்டதே இனி திண்டாட்டம் தான் என்பது பெற்றோர்களின் புலம்பல்.
இந்த கால குழந்தைகள் தனித்தனி மரமாகவே வளர்கின்றாகள், முந்தைய தலைமுறை தோப்பாக வளர்ந்தார்கள். வேலைக்கு போகும் பெற்றோர்கள் கோடையில் குழந்தை
களை பார்த்துக்கொள்வதில் சிரமம் இருக்கின்றது, அதனால் சம்மர் கேம்பில் போடு
கின்றோம், வேண்டுமானால் பள்ளி கூட மே மாதம் முழுக்க வைத்துவிடுங்கள் என் கின்றார்கள். வீட்டில் தாத்தா பாட்டி இல்லை, வெளியே விடுவதற்கு சம்மதம் இல்லை, பெரியப்பா, சித்தப்பா, மாமா என வெளி உலக தொடர்புகள் இல்லை. என்ன செய்வது என்று கார்னர் செய்துகொண்டே இருப்பார்கள். இவர்களுக்காக ஒரு யோசனை, நிச்சயம் நடைமுறை சாத்தியமான விஷயமே.

மொத்தமாக ஆறு வாரங்கள் விடுமுறை என வைத்துக்கொள்வோம். வீட்டை சுற்றி உங்களைப்போன்ற நண்பர்களை உங்கள் சுற்றுவட்டாரத்தில் கண்டுபிடியுங்கள். அதாவது கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்கள், வீட்டில் ஒரு குழந்தையோ இரண்டு குழந்தையோ இருக்கின்ற குடும்பத்தினர். அவர்களும் கோடைக்கு குழந்தையை என்ன செய்வது என தெரியாமல் தத்தளிப்பவர்கள். மொத்தம் 12 பெற்றோர்கள் கணக்கு வந்ததா? ஒவ்வொரு பெற்றோராக மாறி மாறி 3 நாட்கள் விடுமுறை எடுத்தால் போதும் மொத்த பிரச்சனையும் தீர்ந்தது.

1. ஆறு வீட்டு குழந்தைகளுக்கு அன்று விடுமுறை எடுத்த பெற்றோரின் வீட்டில் குழுமி காலை முதல் மாலை வரையில் ஒன்றாக நேரம் செலவிடலாம்.

2. அந்த விடுமுறை எடுத்த பெற்றோர் ஒருங்கிணைக்கலாம்.

3. தத்தமது வீட்டில் இருந்தோ அல்லது பொதுவாக ஓர் இடத்தில் சமைப்பது குறித்து முடிவெடுக்கலாம். ஏன் குழந்தைகளுடன் கூட்டாகவும் சமைக்கலாம்.

4. பொது இடங்களுக்கு அந்த பெற்றோர் அழைத்துச் செல்லலாம் – நூலகம், பூங்கா, கண்காட்சி, கோளரங்கம், வனக்காட்சி சாலை, இப்படி

5. வெயில் கொடுமை அதிமாக இருப்பதால் வீட்டிற்குள்ளேயே விளையாட்டுகள் விளையாடலாம்

6. புத்தகங்களை கூட்டாக வாசிக்கலாம்

7. ஒரு மணி நேரம் நல்ல சினிமா / தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்க்கலாம்.

8. யாரேனும் கேட்ட கதைகளை மற்றவர்களுக்கு கூறலாம். கதையை வளர்க்கலாம்.

9. ஒரு மாதத்தில் ஒரு மாதிரி சிறுவர் இதழினை உருவாக்கலாம்

10. கடிதம் எழுதும் பழக்கத்தினை ஊக்குவிக்கலாம். ஊரில் இருக்கும் உறவினர்களுக்கு எழுதலாம்.

11. அடிக்கடி நூலகம் அனைவரும் போகலாம்.

12. சிறுவர் பாடல்களை தேடி கண்டுபிடித்து அனைவரும் ஒன்றாக பாடி மகிழலாம்.

காலை முதல் மாலைவரையில் ஏதேனும் செய்துகொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. Idle ஆக இருக்கட்டும். அதுவே நிறைய சிந்தனைக்கு தீனி போடும்.
மாலை ஒவ்வொரு பெற்றோரும் வீடு திரும்பும் சமயம் அவரவர் இல்லங்களுக்கு திரும்பலாம். இது சாத்தியமா என்றால் நிச்சயம் சாத்தியம். தங்கள் குழந்தைகளின் விடுமுறையை சிறப்பாக செலவிட மொத்தம் ஒரு பெற்றோர் எடுக்க வேண்டியது மூன்று நாள் விடுமுறை மட்டுமே. திட்டமிட்டால் இன்னும் கச்சிதமாக செயல்படுத்தலாம்.

நம் தெருக்களில் குடியிருப்புகளில் யார் வசிக்கின்றார்கள், என்ன செய்கின்றார்கள் என்று கூட தெரியாத சூழலில் தான் நாம் வளர்க்கின்றோம். முதல்படியாக நம் (பெற்றோர்கள்) நண்பர்களைக் கண்டெடுப்போம். அடுத்த தலைமுறையினருக்கு சக குழந்தைகளுடன் பேசுவதிலும் உரையாடுவதிலும் நிறைய சிக்கல்கள் இருக்கின்றது. இந்த மாதிரியான நிகழ்வுகள் பல குழந்தை வளர்ப்பு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்.
– விழியன்

(நன்றி: வண்ணக்கதிர், ஏப்ரல் 16, 2017)


Share the post

கோடையை குழந்தைகளோடு கொண்டாடலாம் இப்படி!

×

Subscribe to விழியன் பக்கம் | வரம்பு மீறும் இளைஞனின் எண்ணங்கள்…

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×