Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

முயலமையை வென்ற ஆமை (Tortoise overcomes adversity)



நண்பர்களே, நாமள இறைவன் ஒவ்வொரு தனித்துவமான (unique) படைப்பினம் படைத்து இருக்கிறார், அவை உடல்வாகு, திறமை, பழக்கவழக்கங்கள், மற்றும் பல இருக்கலாம்.

அதை வைத்து நம்மளை சிலர் ஏளனம் (ridicule) செய்வார்கள். அவளுடன் வீண்வாதம் செய்வதை விட்டு அது என்னுடைய குறையுமில்லை அது தான் என்னுடைய வெற்றிக்கு (success) மூலதனம்.

அதற்கு நாம் செய்யவேண்டியது தொடர்ச்சியானா முயற்சி மற்றும் செயல் (Continuous effort and action).
இதை நாம் காலகாலமாக கேட்ட ஒரு கதை இருக்கு அதுதான் முயலை வென்ற ஆமை இதை நாம் இப்படி கூட சொல்லலாம் முயலமையை வென்ற ஆமை (Tortoise overcomes adversity) என்று.

சரி இப்ப கதைக்கு வருவம், வழக்கம்ப்போல் ஒரு காடு இருந்தன, காடு இருந்த நாடு இருக்கும் இது பழமொழி அத செல்ல வரல காடு இருந்த அங்க பல வகை மிருகங்கள் இருக்கும். அதைப்போல் அங்கும் இருந்தன. அந்த மிருகங்கள் ஒவ்வொரு வருடமும் வன விழானு கொண்டாடும். அது ரெம்ப பிரபலமானது அதுல ஆடல், பாடல் மற்றும் பல கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.

ஆனா,  ஒவ்வொரு வருடமும் அதபண்ணி ரெம்ப சலிப்பு (bore) ஆனாது. இந்த முறை நம்ம வித்தியாசமாக நடத்த முடிவுபண்ணி என்ன பண்ணலாம் என்று வழக்கம்போல் நாம் நரியிடம் ஆலோசனை கேட்டன.

நரியும் நீண்ட யோசனைக்கு பிறகு, நாம் ஏன் முயலுக்கும், ஆமைக்கும் ஒரு ஓட்டப் பந்தயம் நடத்த கூடாது என்று கூறியது.

இதை கேட்ட அணைத்து மிருகங்களும் இது  நல்ல யோசனை இல்லை ஆமையால் நிச்சியம் முடியாத காரியம் என்று கூறினா. திமிரு பிடித்த முயலும் தன் பங்குக்கு, நானும் ஆமையும் ஓட்டப் பந்தயமா என்று பலமாக சிரித்தது. இதை கேட்ட ஆமையும் ஆமாம் முயலும் மற்ற மிருகங்கள் கூறுவதான் சரி தான் என்று ஆமை அமைதியாக கூறியது.

ஆனால், திமிரு பிடித்த முயல் மேலும் ஆமையை கிண்டலும், கேலியும் பண்ணியது.

இவருகூட பந்தயம் வைச்ச ஓடி முடிச்சு பிறகு, நான் வீட்டுக்கு போய் நல்ல சாப்பிட்டு, ரெஸ்ட் எடுத்து மறுநாள் வந்து பார்த்த கூட ஆமை பந்தய கோட அடையாது என்று பலமாக சிரித்தது, நீங்களும் காலையிலிருந்து மாலை வரை உண்ண விரதம் இருக்க வேண்டியது தான் என்று ஆமையை பலவாறு அவமானம்படுத்தியது.


இதை கேட்ட ஆமை சற்றும் மனம் தாராளமால் நான் போட்டிக்கு ரெடி முயலுக்கு என்னுடன் போட்டி போட ரெடியா என்றது இதை கேட்டவுடன் சபை ஒரு நிமிடம் அமைதியானது.  அணைத்து மிருகங்களும் முயலை பார்த்தன முயலுக்கு மிக அவமானம் ஆனது.

முயலும் வார்த்தை சற்று தடுமாறியப்படி இதில் என்ன இருக்கிறது. ஆமைக்கு சம்மதம் என்றால் எனக்கு சம்மதம் தான் என்றது. அனைவரும் போட்டிக்கு உண்டான இடம், நாள் எல்லாத்தையும் முடிவுப்பண்ணி அங்க இருந்து கலைந்தன.

 இதை முயல் பெரும் அவமானமாக கருதி இனி ஆமை, இந்த போட்டியில் தோற்று.  அதன்  அவமானத்தால் வாழ்நாள் முழுவதும் இந்த காட்டு பக்கம் தலை காட்ட கூடாது. ஆனால், ஆமை வழக்கம்போல் தன் வேலையை பார்த்துக்கொண்டு இருந்தது.

போட்டி நாள் வந்தது மிருகங்கள் அனைத்தும் ஒன்று கூடினா. முயலும், ஆமையும் போட்டிக்கு தயாராக நின்றது. போட்டி ஆரம்பம் ஆனது முயல் எடுத்த வேகத்தில் எல்லை கோடு பக்கத்தில் போய் நின்றது அப்பதான் ஆமை தன் முதல் அடியே வைத்து மெதுவாக வந்து கொண்டு இருந்தது.

இதை பார்த்த முயலும் மற்ற மிருகங்கள் கேலி செய்தன இருந்தும் ஆமை மனம்தாராளமால் தன் அடியை முன்னோக்கி வைத்தது நேரம் ஆக முயலுக்கு கர்வம் தாங்காமல் எல்லை கோட்டை தாண்டமல் அதன் அருகில் நின்றுகொண்டது அப்படியே தூங்கிவிட்டது.

ஆமை இறுதியாக எல்லை கோட்டை கடந்து போட்டியில் வெற்றிப் பெற்றது. முயல் தோற்றது அவமானம் தாங்காமல் அந்த காட்டை விட்டு ஓடியது அன்று முதல் முயல் அந்த காட்டுக்கு வரவே இல்லை. இது மற்ற விலங்குகளுக்கும் நல்ல படிப்பினை ஆனது.

















This post first appeared on ThamilSmallStories, please read the originial post: here

Share the post

முயலமையை வென்ற ஆமை (Tortoise overcomes adversity)

×

Subscribe to Thamilsmallstories

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×