
அவுஸ்திரேலியாவில் TOOWOOMBA பகுதியை சேர்ந்த ஜோஸ்வா டேவிஸ் மற்றும் அய்லா கிரஸ்வெல் ஆகிய ஜோடி கடந்த இரண்டு ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.
TOOWOOMBA பகுதியில் ரக்பி வீரரான ஜோஸ்வா அடுத்த சில மாதங்களில் தமது காதலியான அய்லா கிறிஸ்வெலை திருமணம் செய்து கொள்ள இரு வீட்டார் சம்மதத்துடன் முடிவு செய்திருந்தார். எதிர்காலக் கனவுகளுடனும் மகிழ்ச்சியாக தங்கள் காலத்தை கழித்து வந்தனர்.
இந்த நிலையில் துரதிஷ்டவசமாக ஜோஸ்வா கடந்த ஆகஸ்ட் மாதம் விபத்து ஒன்றில் பரிதாபமாக மரணமடைந்தார். இதனால் பெரும் துயரத்தில் ஆழ்ந்த அய்லா, தனது காதலர் எப்போதும் தன் அருகிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக அதிரடி முடிவு ஒன்றை தமது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
அய்லாவின் இந்த முடிவு இரு குடும்பத்தினருக்கும் சரி என்று பட்டதால், இறந்த ஜோஸ்வாவின் உயிரணுவில் இருந்து கருவுற முடிவு செய்த அய்லாவுக்கு ஆதரவளித்தனர்.
விளையாட்டு வீரர்கள் பலர் தங்கள் உயிரணுவை மருத்துவமனையில் சேமித்து வைத்திருப்பது போன்று ஜோஷ்வாவும் ஏற்கனவே சேமித்து வைத்திருந்தார்.
இதனையடுத்து நீதிமன்றத்தை நாடிய அய்லா ஜோஷ்வாவின் உயிரணுவை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஜோஷ்வாவுடன் 3 குழந்தைகளை பெற்றெடுக்க முடிவு செய்திருந்ததாகவும், தனது இந்த முடிவில் அவர் கண்டிப்பாக பெருமைப்படுவார் எனவும் நீதிமன்றத்தில் அய்லா வாதிட்டார்.
இதனையடுத்து நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கியது. மேலும் சேமிக்கப்பட்டிருந்த இந்த விந்தணு, கருவுறுதலை நிகழ்த்தும் அளவிற்கு ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து கூடிய விரைவில், செயற்கை கருத்தரித்தல் மூலம் ஜோஸ்வாவின் குழந்தையை தனது வயிற்றில் சுமக்க உள்ளார் அய்லா.”ஜோஸ்வாவும், நானும் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என திட்டமிட்டுருந்தோம். ஆனால் அதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டார். இருப்பினும் அவரது கனவை நினைவாக்கும் முயற்சியில் வெற்றி பெற்று விட்டேன்.”என அய்லா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அய்லாவின் இந்த முடிவுக்கு அவுஸ்திரேலியாவிலுள்ள காதலர்களிடமிருந்து வாழ்துக்கள் குவிந்து வருகின்றன.