Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

யாழ் வீடொன்றின் மீது துப்பாக்கிப் சூடு!

யாழ்ப்பாணம் பிரம்படி இரண்டாம் ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் மீது நேற்று அதிகாலை, (வியாழக்கிழமை) துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்ற வீட்டின் உரிமையாளரின் மகன் கடந்த காலங்களில் யாழ்.நகர் பகுதியில் உள்ள இளைஞர் குழு ஒன்றுடன் முரண்பட்டு உள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. அதனை அடுத்து முன்னரும் இந்த இளைஞர் குழு அவர்களது வீடு புகுந்து தாக்குதல் நடத்தி இருந்தார்கள். தற்போது வீட்டின் மேல் சுட்டும் உள்ளார்கள்.

இவர்கள் கைத் துப்பாக்கி ஒன்றை பாவித்தே சுட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருகிறது. அதனை தொடர்ந்து தாக்குதலுக்கு இலக்கான வீட்டார் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததை அடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் தாக்குதலாளிகள் தற்போது இனம் காணப்பட்டுள்ளனர் என மேலும் அறியப்படுகிறது.


This post first appeared on HowLanka, please read the originial post: here

Share the post

யாழ் வீடொன்றின் மீது துப்பாக்கிப் சூடு!

×

Subscribe to Howlanka

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×