Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

இனி பேஸ்புக் மூலம் உங்கள் பொருட்களை விற்கலாம்!



இதனைக் கருத்திற்கொண்டு முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் தனது பயனர்களுக்காக Marketplace எனும் புதிய வசதியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இவ்வசதியின் ஊடாக ஒவ்வொருவரும் தாம் விற்க வேண்டிய பொருட்களை விளம்பரம் செய்து அவர்களின் நாட்டிற்குள்ளேயே விற்பனை செய்ய முடியும்.

இவ்வசதியினை மொபைல் சாதனங்களில் இலகுவாக பயன்படுத்தக்கூடிய வகையில் விசேட அப்பிளிக்கேஷன் ஒன்றினையும் பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

தற்போது பேஸ்புக் குழுக்களின் (Facebook Groups) ஊடாக மாதாந்தம் சுமார் 450 மில்லியன் வரையானவர்கள் தமது பொருட்களை விற்பதுடன், பொருட்களை கொள்வனவு செய்து வருவதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே இவர்களை குறிவைத்தே இப்புதிய வசதியினை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்கின்றது.

இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் Ebay, Amazon, FlipCart போன்ற ஒன்லைன் வியாபார தளங்களுக்கு மிகுந்த சவாலாக இருக்கும்.
தற்போது ஒன்லைன் ஊாடாக பொருட்கள் வாங்குவதும், விற்பதும் மிகவும் பிரபல்யமடைந்து வருகின்றது.


This post first appeared on HowLanka, please read the originial post: here

Share the post

இனி பேஸ்புக் மூலம் உங்கள் பொருட்களை விற்கலாம்!

×

Subscribe to Howlanka

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×