Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

லாவா ஏ 68 பட்ஜெட் ஸ்மார்ட் போன்

லாவா ஏ 68 பட்ஜெட் ஸ்மார்ட் போன்

லாவா நிறுவனம், தன் A வரிசையில், ‘A 68’ என்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட் போனை அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் திரை 4 அங்குல அளவில் 800 × 480 பிக்ஸெல் அடர்த்தியுடன் தரப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளே WVGA TFT வகையைச் சேர்ந்தது. இதன் குவாட் கோர் ப்ராசசர் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கக் கூடியது.
ராம் மெமரி 1 ஜி.பி. மற்றும் ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. ஆக உள்ளது. மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு, ஸ்டோரேஜ் மெமரியை 32 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம். இதில் ஆண்ட்ராய்ட் 6.0 மார்ஷ்மலாய் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது.
இரண்டு சிம்களை இந்த ஸ்மார்ட் போனில் பயன்படுத்தலாம். எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா பின்புறமாக இயங்குகிறது. முன்புறமாக இயங்கும் 0.3 எம்.பி. திறன் கொண்ட கேமராவும் எல்.இ.டி. ப்ளாஷ் கொண்டுள்ளது.
இதன் பரிமாணம் 134 x 66 x 9.6 மிமீ. ஆக உள்ளது. எடை 130 கிராம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதில் தரப்பட்டுள்ள பேட்டரி 1750 mAh திறன் கொண்டது.
மூன்று வண்ணங்களில் வெளியாகியுள்ள இந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட் போனின் அதிக பட்ச விலை ரூ. 4,599. சில விற்பனை மையங்களில், ரூ. 4,049க்குக் கிடைக்கிறது. இந்தியா முழுவதும் மொபைல் விற்பனை மையங்களில் இதனை வாங்கலாம்.



This post first appeared on Tamiltech, please read the originial post: here

Share the post

லாவா ஏ 68 பட்ஜெட் ஸ்மார்ட் போன்

×

Subscribe to Tamiltech

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×