Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

அறிய வேண்டியவை-பதிவு-96


             ஜபம்-பதிவு-588
       (அறிய வேண்டியவை-96)

“அமைதியைத் தேடிச்
செல்லும் எனக்கு
யாருடைய
தொந்தரவும்
இருக்கக் கூடாது
என்பதற்காக - நான்
இந்த மடுவிற்கு வந்து
தண்ணியை
ஸ்தம்பனம் செய்து
தண்ணீருக்குள்
ஓய்வு பெற்றுக்
கொண்டு இருக்கிறேன்”

“நான் ஓய்வு
எடுத்து கொண்டு
தான் இருக்கிறேன்
பயந்து எங்கும்
ஓடிப் போகவில்லை
எதைக் கண்டும்
பயந்து ஓட
மாட்டான் இந்த
துரியோதனன் “

“பயத்தினால்
ஒளிந்து கொண்டான்
பயத்தினால்
பதுங்கிக் கொண்டான்
பயத்தினால்
தலைமறைவாகி
விட்டான்
என்பதெல்லாம்
துரியோதனனுடைய
வாழ்க்கையிலேயே
கிடையாது”

“துரியோதனன்
பயத்தைப்
பார்த்து என்றும்
பயந்ததே இல்லை
துரியோதனனைப்
பார்த்து பயம் தான்
பயந்து இருக்கிறது
பயத்தையே பயப்பட
வைத்தவன் இந்த
துரியோதனன்
அப்படிப்பட்ட
துரியோதனனா
தோல்வியைக் கண்டு
பயந்து ஓடுவான்”

“நான் எங்கும்
பயந்து ஓடவில்லை
என்னுடைய மனதிற்கும்
உடலுக்கும் ஓய்வு
தேவைப்படுகிறது
ஓய்வு எடுப்பதற்காக
இங்கு வந்தேன் “

“நாளை காலை
போரிடுவோம்
செல்லுங்கள் - நாளை
காலை எனக்காகக்
காத்திருங்கள்
அதுவரை யாருடைய
கண்ணிலும் படாமல்
தனித்து இருங்கள் “

(அஸ்வத்தாமன்
கிருபர் கிருதவர்மன்
ஆகியோர் ஒரு
ஆலமரத்தடியில் வந்து
அமர்ந்து ஓய்வு
எடுத்துக்
கொண்டிருந்தார்கள் )

/////////////////////////////////////////////

(பாண்டவர் படையில்
உள்ள வீரர்கள்
எட்டு திசைகளுக்கும்
சென்று தேடியும்
துரியோதனன் எந்த
இடத்தில்
இருக்கிறான்
என்பதை அவர்களால்
கண்டு பிடிக்கவே
முடியவில்லை

“ஒற்றர்களாலும்
துரியோதனன்
இருக்கும்
இடத்தைப் பற்றிய
விவரங்கள் எதையும்
கண்டு பிடிக்க
முடியவில்லை”

“பஞ்ச பாண்டவர்கள்
பாண்டவர்களின்
படை வீரர்கள்
ஒற்றர்கள் என
அனைவரும்
தேடியும்
துரியோதனன் எங்கு
இருக்கிறான்
என்பதைக்
கண்டு பிடிக்க
முடியவில்லை  

“அஸ்வத்தாமனும்
துரியோதனனும்
பேசிய
பேச்சுக்ளைக்
கேட்டுக்
கொண்டிருந்த
வேடர்கள்
பீமனுக்கு இறைச்சி
தயாரித்து தருகின்ற
வேடர்கள்
துரியோதனன் எங்கே
மறைந்திருக்கிறான் 
என்ற விஷயத்தை
பீமனிடம் கூறினால்
பீமன் நிறைய பொருள்
தருவார் என்று
எண்ணிய வேடர்கள்
பாண்டவர்கள்
பாசறை
சென்று பீமனிடம்
துரியோதனன்
த்வைபாயனம்
என்னும் மடுவில்
மறைந்திருப்பதைச்
சொன்னார்கள் “

“வேடர்கள் சொன்ன
விஷயத்திற்காக
பீமன் அவர்களுக்கு
தாராளமாக
பரிசுகளை
அள்ளி வழங்கினான்”

“இந்த விஷயத்தைக்
கேள்விபட்ட யுதிஷ்டிரர்
உட்பட அனைவரும்
மகிழ்ச்சி அடைந்தனர்”

“துரியோதனன்
இருக்கும் இடம்
தெரிந்து விட்டதால்
கிருஷ்ணன்
தலைமையில்
பாண்டவர் படை
பீமன் அர்ஜுனன்
நகுலன் சகாதேவன்
திருஷ்டத்யும்னன்
சிகண்டி சாத்யகி
ஆகிய அனைவரும்
யுதிஷ்டிரருடன்
சென்றனர் )
///////////////////////////////////////////////

(துரியோதனன்
மறைந்திருக்கும்
த்வைபாயனம் என்னும்
மடுவிற்கு அனைவரும்
வந்தனர்)

தர்மர் :
“பார்த்தீர்களா
பரந்தாமா துரியோதனன்
தண்ணீரை ஸ்தம்பனம்
செய்து தண்ணீரின்
அடியில் போய்
மறைந்திருக்கிறான் “

“மாய வித்தையைக்
காட்டி மறைந்து
கொண்டிருக்கிறான்
யாரும் தன்னை
நெருங்க முடியாது
யாரும் தன் அருகில்
வரமுடியாது என்று
நினைத்துக் கொண்டு
மறைந்திருக்கிறான்”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 09-07-2020
/////////////////////////////////

Share the post

அறிய வேண்டியவை-பதிவு-96

×

Subscribe to பாலாவின் பார்வையில் ”சித்தர்கள்”

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×