Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

மதிமுக வேட்பாளர் டாக்டர் ரொஹையா ஷேக்முகமது ” மக்களுக்கு சேவை செய்து உழைக்க வந்துள்ளார் , மக்கள

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்கள் நலகூட்டணி , தே மு தி க , த மா க கூட்டணியின் மதிமுக வேட்பாளர் டாக்டர் ரொஹையா ஷேக்முகமது ” மக்களுக்கு சேவை செய்து உழைக்க வந்துள்ளார் , மக்களை ஏமாற்றி பிழைக்க வரவில்லை ”

திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட KK நகர் பேருந்து நிறுத்தம் அருகில் மதிமுக வேட்பாளர் டாக்டர் ரொஹையா ஷேக்முகமது அவர்களை ஆதரித்து தெருமுனை பிரச்சாரகூட்டம் நடைபெற்றது , இக்கூட்டத்திற்க்கு மாநகர் மாவட்ட செயலாளர் வெல்ல மண்டி சோமு தலைமை வகிக்க பகுதி செயலாளர் பிரபாகரன் , தே மு தி க பாரிவேந்தன் , த மா க கோட்ட தலைவர் அய்யாப்பன் , மாநில மாணவரணி செயலாளர் தமிழ்மாணிக்கம், புறநகர் செயலாளர் சேரன் , வடிவேல்குமார் , சங்கர் , மலைகோட்டை பகுதி செயலாளர் SR செந்தில் , KP மனோகரன் , இளமுருகு இராஜன் , ஆகியோர் முன்னிலை வகித்தனர் , மேலும் கூட்டணி கட்சியினர் இத்தெருமுனை பிரச்சாரத்தில் திரளாக பங்கேற்றானர் , இந்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக அரசியல் ஆய்வு குழு உறுப்பினர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வேட்பாளர் டாக்டர் ரொஹையா ஷேக்முகமதுவை ஆதரித்து பேசுகையில் கிழக்கு தொகுதிக்கு ஒரு நல்ல படித்த சேவை மனப்பான்மையுள்ள நல்ல வேட்பாளர் ஒருவர் உண்டு என்றால் டாக்டர் ரொஹையா ஷேக்முகமதுவை தவிர யாரையும் சொல்லி விடமுடியாது , இவர் உழைக்க வந்துள்ளார் , பிழைக்கவரவில்லை , மேயர் தேர்தலில் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் பெற்றவர் , இவர் கிழக்கு தொகுதியில் நிறுத்தப்பட்டதால் ஆளும் அதிமுக 3 முறை வேட்பாளர்களை மாற்றி உள்ளது , என்பதே நமது முதல் வெற்றி தற்போதைய சட்டமன்ற கொறடா எங்கே? எங்கள் வேட்பாளரை வெற்றி பெற முடியாது என்பதால் தான் அதிமுக தடுமாறீ தங்களின் வேட்பாளர்களை மாற்றி உள்ளது டாக்டர் ரொஹையா தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர் , அனுபவமிக்க மருத்துவர் , யாரும் எளிதில் அணுக கூடியவர் , அதிமுக , திமுக இந்த 2016 தேர்தலில் கண்டிப்பாக தோற்றுபோகும் இம்முறை ஒரு மாற்றம் வந்தே தீரும் , பணம் கொண்டு எதையும் சாதித்து விடலாம் என்ற எண்ணம் இம்முறை மக்களிடம் எடுபடாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் , தமிழகத்தில் 47 ஆண்டுகளில் 3 முதல்வர்கள் தான் ஆண்டு உள்ளார்கள் , பத்திரிக்கைகளும் , ஊடகங்களும் கருத்து அளிப்பு என்ற தோற்றம் என்ப்து பித்தலாட்டம் , இந்த மாயையை நாங்ககளும் எங்கள் கூட்டணி கட்சி தலைவர்களும் உடைத்தெரிவோம், கண்டிப்பாக RK நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா தோற்றுபோவார் , மணல் கொள்ளையடித்தவர்கள் இதற்க்கெல்லாம் பதில் சொல்லமுடியுமா? மணல் கொள்ளை வரைமுறை இல்லாமல் அடிக்கப்பட்டது , மேலும் சகாயம் என்ற நேர்மையான அதிகாரி பேட்டி ஒன்றில் கூறும் போது அரசின் கருவூலத்திற்க்கு வரவேண்டிய நிதி 1 இலட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாய் எங்கே போனது? இதற்க்கு யார் பொறுப்பு ? பதில் சொல்லமுடியுமா? எங்கள் தலைவர் வைகோ கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர் , இரண்டு கட்சிகளும் ஆட்சி செய்து ஊழல் பெருத்து விட்டது , இதற்க்கு எல்லாம் ஒர் தீர்வு கேப்டன் விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமையும் போது ” பப்ளிக் ஆடிடிங் கமிட்டி” அமைக்கப்பட்டு முறையான விசாரனை நடைபெறும் இது உறுதி 47 வருடங்களில் காணமல் போன ஏரி , குளம், புறம்போக்கு நிலங்கள் எல்லாம் மிட்கப்படும் , மக்கள் நலக்கூட்டணி கட்சி அமைந்தால் உண்மையான தூய்மையான ஒரு நல்ல அரசு மற்றும் நிர்வாகம் ஏற்படுத்தப்படும் இவ்வாறு அவர் பேசினார் .
This post first appeared on டாக்டர் ரொஹையா ஷேக்முகமது, please read the originial post: here

Share the post

மதிமுக வேட்பாளர் டாக்டர் ரொஹையா ஷேக்முகமது ” மக்களுக்கு சேவை செய்து உழைக்க வந்துள்ளார் , மக்கள

×

Subscribe to டாக்டர் ரொஹையா ஷேக்முகமது

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×