Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

துபாய் விசா பற்றிய ஒரு நல்ல நியூஸ்!!

அனுமதிக்கப்பட்ட காலம் முடிந்த பின்னரும், முறையான அனுமதியின்றி United Arab Emirates (UAE) இல் வாழ்ந்து கொண்டிருக்கும் வெளிநாட்டு மக்களுக்கு மன்னிப்பு தரும் விதமாக தண்டனை மற்றும் தண்டம் இன்றி நாட்டை விட்டு வெளியேற ஒரு வாய்ப்பை ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை அந்த நாடு செயல் படுத்தி வருகிறது. பொதுவாக ஐந்து வருடத்திற்கு ஒரு தடவை இந்த பொது மன்னிப்பை செயல்படுத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சட்ட விரோத குடியேறிகளைக் கட்டுப்படுத்தி, அவர்களால் ஏற்படும் குற்றங்களையும் குறைப்பதற்காக இந்த வருடம் அக்டோபர் 31 க்குப் பிறகு விசிட் விசா மற்றும் டூரிஸ்ட் விசா கொள்கைகளை மாற்ற UAE முடிவு செய்துள்ளது.

இதில் ஒரு நல்ல செய்தியும் உள்ளது.

துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு வேலை தேடி வருபவர்களுக்கு இனி ஆறு மாதம் அங்கு தங்கி வேலை தேட அனுமதி தரப்போகிறது அந்த அரசு.

இப்போதுள்ள நிலைமை ஒரு மாதம் மற்றும் மூன்று மாதம் மட்டுமே தங்க முடியும். மூன்று மாதத்துக்குள், நமது அனுபவத்துக்கும், ஆசைக்கும் ஏற்றவாறு வேலை தேடுவது கொஞ்சம் கஷ்டம் தான்.

அவசரம் அவசரமாக வேலை தேடும்போது விசா முடியும் தேதி வருவதால் கிடைத்த வேலையை ஏற்றுக்கொண்டு, குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் நிலையும் ஏற்படுகிறது. மேலும், சில நிறுவனங்கள் விசா முடிவு தேதி நெருங்கி வருவதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நிலையும் இதுவரை இருந்துள்ளது.

இனிமேல் அந்த கவலை இல்லை.

ஆறுமாதம் பொறுமையாக இருந்து மனதுக்கு பிடித்த வேலையை தேடிக்கொள்ளலாம். இந்த கொள்கை முடிவுகள் அரசால் விரைவில் அறிவிக்கப்படப்போகிறது.

மேலும், வேலை தேடி UAE செல்வோர் இனி செக்யூரிட்டி டெப்பாசிட் செய்ய வேண்டியிருக்கும். எவ்வளவு தொகை என்று இனிமேல் தான் தெரியும். ஆறுமாதமும் வேலை கிடைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுவதை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சட்ட விரோதமாக வாழ்பவர்கள் திரும்ப நாட்டுக்கு அனுப்பப்படும்போது அவர்களது விமான டிக்கட்டை இனிமேல் சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்களே ஏற்கவேண்டும்.

வேலை இடங்கள், தங்குமிடங்கள் போன்றவற்றில் அடிக்கடி சோதனை நடத்தவும் முடிவாகியுள்ளது. பிடிபடும் நபர்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்படும்.

விசா இல்லாமல் UAE இல் இருக்கும் வெளிநாட்டவருக்கு வேலை வழங்கினால் AED. 50,000 ஒரு நபருக்கு என்று வேலை வழங்கிய நபர் தண்டம் கட்ட நேரிடும்.

best time to visit dubai,  how to apply dubai visa from india, passport, fine, penalty, uae, united Arab emirates



This post first appeared on Fatinonline, please read the originial post: here

Share the post

துபாய் விசா பற்றிய ஒரு நல்ல நியூஸ்!!

×

Subscribe to Fatinonline

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×