Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ரூட்டை மாற்றி ஸ்ட்ரெஸ்சை குறைப்பது எப்படி?

கடுப்பேற்றும் காரியங்கள் அன்றாடம் நம் வாழ்வில் நிகழும்போது நம்மிடம் இயல்பாக ஊற்றெடுக்கும் சந்தோசங்களை இழக்கவேண்டிய நிலைமைக்கு நாம் தள்ளப்படுகிறோம். மகிழ்ச்சியற்ற தினசரி வாழ்க்கை நம்பிக்கையை குலைத்து நாளடைவில் வாழ்வின் மேல் வெறுப்பை ஏற்படுத்தி விடக் கூடிய அபாயம் இருக்கிறது.

சில ரூட் மாற்றங்கள் இவ்வழி வரும் அழுத்தங்களை குறைத்து நம் இயல்பை மீட்டெடுக்க உதவும்.

  • நீங்கள் என்ன தான் அசகாய சூரனாக இருந்தாலும் உங்களுக்கென்று லிமிட் என்று ஒன்று இருக்கிறது. உங்கள் திறமை, நேரம், வளங்கள், உழைப்பு, ஆரோக்கியம் எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கிறது. உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும், வருமானத்துக்கும் போக தான் மீதமுள்ள வளங்களை, நேரத்தை நீங்கள் விரும்பினால் மட்டுமே மற்றவர்களுக்கும், சமூகத்துக்கும் கொடுக்க வேண்டும். அதுவல்லாது, மற்றவர்கள் இழுத்த இழுப்பிற்கு நீங்கள் போனால் “எடுப்பார் கைப்பிள்ளை ஆகி விடுவீர்கள். உங்கள் பொன்னான நேரத்தை மற்றவர்கள் விழுங்குவார்கள். உங்கள் வளங்களை, உங்கள் உழைப்பை மற்றவர்கள் சுரண்டுவார்கள். இதற்கு நீங்கள் அனுமதித்தால், உங்கள் உழைப்பை சுரண்டி அவர்கள் முன்னேறுவார்கள், நீங்கள் இருந்த இடத்திலேயே இருப்பீர்கள். எனவே, உங்கள் கடமை, பொறுப்புகள், உரிமைகளை முதலில் உணருங்கள். அதற்கு அப்பாற்பட்டு உங்களிடம் வரும் எதையும் அனுமதிக்காதீர்கள். உங்கள் தலையில் ஒரு வேலையை கட்டினால் – அதனைக்கொண்டு உங்களுக்கு ஒரு நன்மை, வருமானம் இது எதுவுமில்லை என்றால் ஒரு மன மகிழ்ச்சியாவது கிடைக்க வேண்டும். இது எதுவும் இல்லாமல் உங்கள் தலையில் ஒரு வேலையை யாராவது கட்டினால் – உடனடியாக நோ சொல்லிவிடுங்கள். மற்றவர்கள் முகம் சுண்டுமே, இவன் நம்மை பற்றி தவறாக நினைப்பானே, இவனால் நமக்கு பிறகு இடைஞ்சல்கள் வருமே என்று யோசித்து – வளைந்து கொடுத்தால் உங்களை மற்றவருக்கு அடிமையாக்கி கொண்டீர்கள் என்று அர்த்தம்.
  • உறவினரோ, நண்பரோ, ஊர்காரரோ அவரால் தொடர்ச்சியாக நமக்கு இன்னல்கள், மன நிம்மதி குறைகிறது என்றால் கொஞ்சம் கூட யோசிக்காதீர்கள். அவர்களுடைய அருகாமையை தவிருங்கள். அவர்களால் உங்களுக்கு ஒரு உதவி கூட கிடைக்காது. உங்களை உங்கள் போக்கில் வாழ விட மாட்டார்கள். அவர்கள் சொன்னபடி நீங்கள் வாழ வேண்டும். விமரசித்துகொண்டே இருப்பார்கள். கூடவே இருந்து விவரங்களை தேர்ந்துகொண்டு மற்றவர்களிடம் அதைப்பற்றி சொன்னால் தன அவர்களுக்கு நிம்மதி. நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தை பற்றியும் அவர்களுக்கு சொல்லியாக வேண்டும். இல்லையெனில், குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். உங்கள் நேரத்தை சூறையாடுவார்கள். கூடவே இருந்து உயிரை எடுப்பார்கள். இத்தகைய மனிதர்களை தவிர்ப்பது தான் உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் நல்லது. உறவுகளை நேசிக்க வேண்டும், நண்பர்களை நேசிக்க வேண்டும் என்பதெல்லாம் உண்மை தான். அதற்காக கடிவாளத்தை அவர்களிடம் தரவேண்டிய அவசியம் இல்லையே?
  • உங்களுக்கு பிடிக்காத விஷயங்கள், மன அழுத்தத்தை கூட்டும் விசயங்களாக இருந்து அவற்றை செய்து தான் ஆக வேண்டும் என்ற நிலைமை இருந்தால் – வேறு எப்படி செய்யலாம் என்று யோசியுங்கள்.ஊர்ந்து ஊர்ந்து தான் செல்ல வேண்டும். அவ்வளவு ட்ராபிக் என்றால் நீங்களும் ஊர்ந்து ஊர்ந்து டென்சனை அதிகபடுத்திக் கொள்வதை விட தூரமாக இருந்தாலும் வேறு ஒரு பாதையை தேர்ந்தெடுத்து சுற்றி செல்லலாம். காசும் நேரமும் கொஞ்சம் அதிகம் ஆகலாம். அதை விட முக்கியமானது மன நிம்மதி. கடைக்கு போய் – அது இருக்கா இது இருக்கா என்று வேருப்படித்து தேடி, தேடியது கிடைக்காமல் மனசு விரும்பாத ஒன்றை தேர்ந்தெடுத்து, க்யூவில் நின்று பணம் செலுத்தி, ஆட்டோ கிடைக்காமல் திண்டாடி, நாக்கு வறண்டு பசியுடன் நொந்து நூலாகி வீட்டுக்கு வந்து அக்கடா என்று விழுவதை காட்டிலும் பெட்டர், ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு நொறுக்குத்தீனி சாப்பிடுவது!!
  • திடீர் என்று தோன்றும் எண்ணம், ஐயோ, எவ்வளவு வேலைகள் மிச்சம் இருக்கின்றன. அதை செய்யணும், இதை செய்யணும் இதை எப்போ முடிப்பேன், அதை எப்போ முடிப்பேன், அவரை சந்திக்கணும், அவருக்கு கால் பண்ணனும் என்று தலையை குடையும் எண்ணங்களால் மிரண்டு விடுகிறீர்களா? டோன்ட் வொர்ரி. ஒரு பேப்பரும் பேனாவும் போதும். கக்கூசுக்கு பினாயில் வாங்குவதிலிருந்து – பஸ் பாஸ் வாங்குவது வரை வரிசையாக விடாமல் எழுதுங்கள். மனதில் தோன்றும் எல்லா எண்ணங்களையும் எழுதுங்கள். இப்போதே போதிய ஆசுவாசம் அடைந்திருப்பீர்கள். அப்புறம், எதை செய்யாமல் விட்டால் உயிர்போயவிடுமோ, அல்லது எதை செய்யாமல் விட்டால் தலைக்கு கத்தி வருமோ அதை பேனாவால் வட்டமிடுங்கள். ஆமாம், இதை தான் முதலில் செய்ய வேண்டும். இல்லையேல் பின்பு பிரச்னைகளை சந்திக்க நேரிடும். அடுத்ததாக செய்ய வேண்டியது, எழுதியதில் எதுவெல்லாம் செய்யாமல் விட்டால் ஒரு பிரச்னையும் வராதோ, செய்தால் ஒரு பிரயோசனமும் இல்லையோ அதை எல்லாம் அழித்து விடுங்கள். முடிந்ததா? வட்டமிடாமலும் அழிக்கப்படாமலும் இருக்கும் வேலைகளை நீங்கள் மெதுவாக செய்து தான் ஆக வேண்டும். அவை உங்களை தொல்லைப்படுத்தாது. ஆனாலும் செய்தால் நல்லது.

மன அழுத்தத்தினை ஒரு வரையறை கொண்டு அளக்க இயலாது. அவரவர் சந்தர்ப்பங்கள் சூழ்நிலைக்கு தக்கவாறே மன அழுத்தம் தாக்குகிறது.  எனவே, எந்த பிரச்னையால் மனம் தாக்குதலுக்கு உள்ளாக்கிறதோ, அதை தவிர்ப்பது, மாற்று ஏற்பாடு செய்வது அல்லது ஏற்றுக்கொள்வது என்ற ரீதியில் தான் மன அழுத்தத்தை குணமாக்க முடியும்.This post first appeared on Fatinonline, please read the originial post: here

Share the post

ரூட்டை மாற்றி ஸ்ட்ரெஸ்சை குறைப்பது எப்படி?

×

Subscribe to Fatinonline

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×