Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

கதவைத் திறப்பது எப்படி?

சாகசங்களில், பயணங்களில் ஆர்வம் உள்ள ஒரு குழுவினர் நகரத்துக்கு அப்பால் காட்டுப்பகுதியில் ஒரு கோயில் இருப்பதாக அறிந்தனர்.

அந்த புராதன கோயில் பற்றிய குறிப்பு ஏதும் இல்லாத நிலையில் அதை நேரில் கண்டு அதன் கலை நுட்பத்தை அறிய முயன்றனர்.

கடுங்குளிரில் இரவில் அந்த கோயிலை அடைந்த குழுவினர் – அந்த காட்டில் இருந்த பிரம்மாண்டத்தை எண்ணி திகைப்படைந்தனர்.

ஐந்து ஆள் உயரத்திற்கு இருந்த இரண்டு மிகப்பெரிய கதவுகள் கோயிலை பாதுகாத்து நின்றன.

இரவில், இந்த கடுங்குளிரில் தான் வந்ததை நொந்துகொண்டு காலை வரை இந்த கோயிலுக்கு வெளியே இருக்க வேண்டுமே என்று கவலையுடன் குளிரில் அந்த குழுவினர் இரவை கழித்தனர்.

அதிகாலையில் ஒரு மனிதர் – அதுவும் ஒரு வயதான மனிதர் அங்கு வந்து சேர்கிறார். வெளியே தங்கி இருக்கும் குழுவினரை அவர் பார்த்ததாக தெரியவில்லை.

நேரடியாக சென்று – கோயிலின் மிகப்பெரிய கதவை லேசாக தள்ளுகிறார். கதவு திறந்து கொள்கிறது. அவர் உள்ளே செல்கிறார்.

இதைப்பார்த்த குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர் .

வேலைப்பாடுகள் அதிகம் மிக்க பலம் மிக்க அந்த இரண்டு கதவுகள் தாழ்ப்பாள் இடப்பட்டிருக்கும் என்றே அவர்கள் இரவு முழுவதும் நம்பி இருந்தனர். ஆனால் வலிமை குறைந்த, முதியவர் அந்த கதவை சுலபமாக கடந்து சென்றது மிகப்பெரிய வெட்கத்தை அவர்களுக்கு தந்தது.

நீதி 1: முயற்சிக்கும் வரை அனைத்துமே கடினமானது.

நீதி 2: நமது நம்பிக்கைகளை வைத்தே அனைத்தையும் எடை போடக்கூடாது.



This post first appeared on Fatinonline, please read the originial post: here

Share the post

கதவைத் திறப்பது எப்படி?

×

Subscribe to Fatinonline

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×