Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

இலவசங்களை மனம் ஏன் விரும்புகிறது?

ஒரு சீப்பான உதாரணத்திலிருந்து தொடங்கலாம்.

சிகரெட் பழக்கம் எப்பவும் தன்னிச்சையாக தானாக துவங்குவதில்லை. புகைக்கும் நண்பர்களுடன் இருக்கும்போது – ஒரு நாள் “சும்மா இழுத்து பாரு. ஒண்ணும் ஆவாது” என்று தான் துவங்கும்.

தொடங்கும்போது இருமல் வரும். கண்களில் தண்ணீர் வரும். புடிக்காது. ரெண்டாவது தடவையும் புடிக்காது.

மூணாவது தடவையாக சின்ன டென்சன் வரும்போது “எனக்கு ஒண்ணு குடுறா” என்று முழுதாக பிடிக்க துவங்கப்படும்.

அதுவரை எல்லாமே ஓசி தான்.

பிறகு காசு கொடுத்து வாங்க தொடங்கி,  கூட வருபவர்களுக்கும் சப்ளையாகும். தண்ணி பழக்கமும் இப்படித்தான். எல்லா கெட்ட பழக்கங்களும் இப்படித்தான்.

மனசோட குணாதிசயத்தில் ஒன்று “இன்ஸ்டன்ட் சந்தோசம்” நாளை கிடைக்கப்போகும் பலாக்காயை விட இன்று கையில் இருக்கும் களாக்காயே மனசுக்கு போதுமானது. இப்படி இப்படி செய்தால் பத்து வருஷம் கழிச்சி நன்றாக இருப்பாய் – என்று சொல்லப்பட்டால் மனசுக்கு அது பிடிப்பத்தில்லை. இதை குடித்ததால் உன் மூளை சுறுசுறுக்கும். இதை தின்றால் சொர்கமே உன் கையில் இருக்கும், இதை செய்தால் உடம்பே மிதப்பதை உணர்வாய் என்று சொல்லப்பட்டால் – மனசு துடியாய் துடிக்கும். அடையத்துடிக்கும். இப்பவே வேணும் என்று அடம் பிடிக்கும். அது தான் மனசு.

மார்க்கெட்டிங் உத்தி என்பது நமக்கே தெரியாமல் நம் வாலட்டை திறந்து பணத்தை எடுத்துக்கொண்டு, நமக்கு தேவையில்லாத பொருளை, தேவையை ஏற்படுத்தி நம் பையில் வைப்பது தான்.

இலவசங்கள் அளிப்பது என்பது அதில் ஒரு உத்தி.

ஒரு தமிழ் பழமொழி உண்டு.

“யானை வாங்க காசு உண்டு. அங்குசம் வாங்க காசு இல்லை” என்பது தான். ஒரு யானை வாங்கினால் ஒரு அங்குசம் இலவசம் என்று விளம்பரித்தால் – மனது அங்குசத்தை தான்முதலில் பார்க்கும்.

ஒரு விசயத்தை பற்றிய அறிவே இல்லாதபோது, அந்த அறிவே நமக்கு தேவையில்லாதபோது, மனது சபலப்பட தொடங்குவது இலவசமாக, எந்த முயற்சியும் இன்றி, பணம் இன்றி கொடுக்கப்படும் பொருளையும் செர்வீசையும் தான்.

தேங்காய் பத்தைக்கு ஆசைப்படும் எலி – பொறியில் சிக்கி உயிர் விடுவது போல – தேவையற்ற சபலங்களின் பின்னால் இருக்கும் மிகப்பெரிய விலையைப் பற்றி கவலைப்படாமல் – இலவசங்கள் பெறுவது மிகப்பெரிய வலையில் விழ ஏதுவாகும்.

வலிமிகுந்த பழக்கங்களையும் உண்டாக்கும்.



This post first appeared on Fatinonline, please read the originial post: here

Share the post

இலவசங்களை மனம் ஏன் விரும்புகிறது?

×

Subscribe to Fatinonline

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×