Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

புத்தாண்டு எப்படி போகிறது?

புது வருஷம் பிறக்கப்போகிறது. இதுவரை நடந்ததெல்லாம் போதும். இனிமேலாவது நன்றாவோம் என்ற ஆர்வம் நம் மனதில் உதிப்பது இயல்பான விஷயம். கெட்ட பழக்கங்களை விட்டுடலாம். அடுத்த வருஷம் இன்னின்ன விசயத்தில் நாம் சாதிக்கணும். இன்னின்ன விஷயங்கள் கத்துக்கணும். மனசுக்குள் புதுசு புதுசா எண்ணங்கள் தோன்றும் நேரம் இது. புது வருசத்தை எதிர்பார்ப்போடு நோக்கும் நாம் – வருஷ முடிவில் அதே சந்தோசத்தை அடைகிறோமா என்றால் பெரும்பாலும் இல்லை என்பதே பதில்.
பிரசவ வைராக்கியம் போல, சோடா பாட்டில் கேஸ் போல அவ்வளவும் சீக்கிரமே போய்விடும். பிப்ரவரிக்குள்ளாகவே மறுபடியும் பழைய நிலைக்கே திரும்பி விடுவோம்.
நியு இயர் தீர்மானங்கள் ரொம்ப நல்லது. மூளைக்கு புத்துணர்ச்சி. உற்சாகம் ஆர்வம். மூளையை தூண்டி விடும் அற்புத தருணம்.
வாழ்க்கை முழுக்க நாம் அடைய வேண்டிய விசயத்தை ஒருவருஷத்திற்குள் அடைந்து விடலாம் என்று தப்பு கணக்கு போடுவது முதல் தோல்வி. படிநிலை முக்கியம். குழந்தை தவழ வேண்டும். இருக்க வேண்டும். நடக்க வேண்டும். பின்பு தான் ஓடவேண்டும். காலம் முக்கியம்.
ஒருவருசத்திற்குள் ஓடணும் என்றால் பிப்ரவரிக்கு முதலே தவழ்வதை நிறுத்தி விடுவோம்.
நிஜம் முக்கியம்.


இன்று ஓட முடியாது. நகர தான் முடியும் என்றால் நகரவேண்டும். புத்தாண்டில் தான் நகர ஆரம்பிப்பேன் என்பது தவறு. எல்லா தினங்களும் இயங்கு தினங்களே.
ஒரு எக்ஸ்பர்ட் சொல்வதை கவனியுங்கள்.
“நீண்ட இலக்குக்களை நிர்ணயித்துக்கொள்ள வருடம் தொடங்கும் வரை காத்திருப்பது நேர விரயம். நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அதிலிருந்து எங்கு செல்ல விரும்புகிறீர்களோ அதுவரை நிஜமாக எவ்வளவு கால அவகாசம் தேவைப்படுமோ அந்த காலத்தை தான் தான் தீர்மானிக்க வேண்டும். உண்மையற்ற, அளவிட முடியாத இலக்குகளை அடைவது வெறும் பகற்கனவே”
“நமக்கு தேவையான ஒன்றை இந்த தேதிக்குள் அடைவேன் என்று எழுதி வைத்துகொண்டு, தேதியுடன் களத்தில் இறங்குவது மிக்க சரியான செயல். நேரம் தேதி குறிப்பிடப்படாத இலக்குகள் பெரும்பாலும் அடையும் தூரத்தில் இருக்கவே இருக்காது”


“நாம் நம் வாழ்வில் எப்போது மாற்றம் தேவை என்று நினைக்கிறோமோ அன்று தான் நமது லட்சிய பயணம் துவங்குகிறது”
இன்னொரு விசயத்தில் கவனம் வேண்டும். அது பாசிடிவ் இலக்குகள்.
“புகைப்பதை விடப்போகிறேன்” என்பது நேகட்டிவ். “எனது ஆரோக்யத்தை மேம்படுத்த ஒவ்வொரு நாளும் முயல்வேன்” என்பது பாசிட்டிவ்.
“வேலையே விடப்போகிறேன்” என்பது நெகட்டிவ். “என் கேரியரில் அடுத்த நகர்வுக்கு ஆயத்தமாவேன்” என்பது பாசிடிவ்.
மிக உயரத்தில் இருக்கும் ஒரு இலக்கை அடையப்போகிறேன் என்று எந்த வித திட்டமும் இல்லாமல் கூறுவது – அது ஒரு ஆசை. அவ்வளவு தான்.டிசம்பர் வரை அந்த ஆசை இருக்கும். பிறகு நினைத்தது நடக்கவில்லை என்று உங்களுக்கு நீங்களே குற்றப்படுத்திக் கொள்வீர்கள்.
விளைவு?
விதிச்சது நடக்கும். பெரிசா அலட்டிக்கொள்ள தேவையில்லை என்று ஒரு தத்துவார்த்த முடிவுக்கு வருவீர்கள்.
“டெய்லி ஜிம்முக்கு போவேன்” என்பது இயற்கைக்கு எதிரான ஆசை. நிஜ வாழ்வில் நிச்சயமா தடை இருக்கும். வாரத்திற்கு ரெண்டு முறை கட்டாயம் போவேன் என்று இயற்கையோடு சேர்த்து இலக்கை நிர்ணயித்தால் நிச்சயம் அடைய முடியும்.
வருச துவக்கத்தில் பொங்கி வழியும் உற்சாகம் இரண்டு வாரத்திற்கு பிறகு இருக்காது. அது இயற்கை. 24 மணி நேரமும் உற்சாகத்துடன் இருக்கும் வண்ணம் மனிதன் படைக்கப்படவில்லை.
இந்த உண்மையை தெளிவாக உணர்ந்து கொண்டால் ஒவ்வொரு நாளையும் இனிமையாகவும் கழிக்க முடியும். இலட்சியத்தை நோக்கி நகரவும் முடியும்.
இந்த ஒரு நாள் உற்சாகத்தை பயன்படுத்தி பெரிய அளவில் செயல்களை செய்துவிட்டால். அது அத்தோடு நின்று போகும். வெறுப்படிக்கும். ஆயிரம் மைல் பயணம் ஒரு சின்ன அடியில் தான் துவங்குகிறது. கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து – சின்ன சின்ன வெற்றிகளை அடைந்து – அந்த வெற்றிகளின் போதையில் மேலும் பவர் ஏற்றி – பெரிய இலக்கை அடைய முயலவேண்டும்.
வாக்கிங் போகிறேன் என்று முதல் நாளே மூணு மணி நேரம் நடந்துவிட்டால் அடுத்த நாள் நடப்பதற்கு காலும் ஒத்துழைக்காது. மனமும் ஒத்துக்கொள்ளாது.
நிஜங்களைப் புரிந்துகொண்டு தீர்மானமாக நகரத் துவங்கி விட்டால் டிசம்பருக்குள் நினைத்தது உங்கள் காலடியில் வந்து சேரும்.This post first appeared on Fatinonline, please read the originial post: here

Share the post

புத்தாண்டு எப்படி போகிறது?

×

Subscribe to Fatinonline

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×