Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

பாக்யராஜின் நேர்மையை பாராட்டும் ரசிகர்கள்! – சர்கார் படத்திற்கு நேர்ந்த அவமானம்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜயை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படம் என்ற அறிவிப்பு
வந்த நாளில் இருந்தே இந்தப் படம் பற்றி பலவாறு பேச்சு அடிபட்டது.

இவிங்களே 2ஜி ஊழல் பத்தி பேசுவாங்களாம் அப்புறம் இவிங்களே அந்த ஊழல் பணத்துல படம்
எடுப்பாங்களாம் என்ன நியாயம் இது என்று அப்போது முதலே இந்தப் படத்திற்கு விமர்சனங்கள் இருந்து வருகிறது.

இதை அடுத்து சிம்டாங்காரன் பாடல் விமர்சனங்களை கிளப்பியது. என்னடா இது ஏ.ஆர்.
ரகுமானுக்கு வந்த சோதனைன்னு முதல் முறையாக ஏ.ஆர். ரகுமானையும் கலாய்க்க
தொடங்கிவிட்டார்கள் இந்தப் பாடலால்.

அதை அடுத்து சர்கார் படத்தின் கதைக்கு சொந்தக் காரர் என்று செய்தி எழுந்தது. ஆனால்
வழக்கமாக விஜய் படத்திற்கு வரும் சர்ச்சை தான் என்று அதை யாரும் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இருந்து அறிக்கை ஒன்று வெளியானது. அதில் சர்கார் திரைப்படத்தின் கதையும் செங்கோல் கதையும் ஒன்று என்ற அறிவிப்பு இருந்தது. அது பெரும் பிரச்சினையை கிளப்ப, ஏ.ஆர்.முருகதாஸ் தன் பக்கத்து நியாயத்தை, கையில் தன்னுடைய ஸ்கிரிப்ட்டை வைத்துக்கொண்டு மிக உணர்ச்சிபூர்வமாக பேசி முன் வைத்தார்.

இதற்கு இடையில் சங்கம் அலுவலகத்தில் பாக்யராஜ் தலைமையில் நிறைய விஷியங்கள்
பேசப்பட்டிருக்கிறது. சர்கார் படத்தின் கதை உதவி இயக்குனர் வருணுடையது என தெரிந்ததும்
ஏ.ஆர்.முருகதாஸை நேரில் அழைத்து சத்தம் இல்லாமல் சமரசம் செய்து வைக்க முயன்றார்.

ஆனால் ஏ.ஆர். முருகதாஸோ நான் நேரடியாக நீதிமன்றத்தை நாடுகிறேன் என்று கிளம்பினார்.
இந்நிலையில் இன்று(அக்டோபர் 30) தீர்ப்பு ஏ.ஆர். முருகதாசுக்கு எதிராக வந்துள்ளது. இது
ஏ.ஆர்.முருகதாசின் வாழ்க்கையில் நேர்ந்த மிகப் பெரிய அவமானம் என்று கூட சொல்லலாம்.

கண்மணியில் நாவல் எழுத தொடங்கி அங்க இங்க என்று உதவி இயக்குனராக இணை
இயக்குனராகப் பணிபுரிந்து அஜித்தை தல ஆக்கி துப்பாக்கியில் விஜயை மாற்றிக்காட்டி
இந்தியில் முத்திரை பதித்து என்று அவருடைய வளர்ச்சி அபரிதமானது. இந்நிலையில் இந்த
நாளில் அவருக்கு இப்படி ஒரு அவமானம். மீண்டு வாருங்கள் ஏ.ஆர்.முருகதாஸ்! இங்க எவனும்
யோக்கியன் இல்ல!

இந்நிலையில் எதிரணி சன் பிக்சர்ஸ், விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் என்று பலமான ஆட்களை
கொண்டது என்ற போதிலும் இதுவரையிலும் தன்னுடைய முகத்தை வெளியே காட்டாத உதவி
இயக்குனர் வருண் என்பவரின் பக்கம் நியாயம் இருக்கிறது எனத் தெரிந்ததும் எதற்கும் அஞ்சாமல் இறுதிவரை நியாயத்தின் பக்கம் நின்ற இயக்குனர் பாக்யராஜை ரசிகர்கள் பலரும் வியந்து பாராட்டுகின்றனர் (ஆர்.ஜே. பாலாஜி, சகாயம், ஹிப்ஹாப் ஆதியை போல இவரையும்
அரசியலுக்கு வர சொல்லுவோமா). காரணம் அவருடைய மகன் யாருடைய ரசிகர் என்பது
சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

அடுத்ததாக எழுத்தாளர் ஜெயமோகன் மீது விமர்சனம் எழுந்துள்ளது. எதோ நாற்பது நாள்
அவிங்களே யோசிச்சு எழுதுன கதைனு சொன்னிங்க இப்ப என்னவாம் என்று அவரையும்
விமர்சகர்கள் விட்டுவைக்கவில்லை.

நீதிமன்றம் ஒவ்வொரு வாரமும் எதோ ஒரு முக்கியமான வழக்கை விசாரித்து தீர்ப்பளித்து
வருகிறது. ஆனால் இணைய உலகம் இன்று காலை பதினோரு மணிக்காக தவியாய் தவித்துக்
கிடந்தது. தீர்ப்பு வந்ததும் சர்கார் படக்குழுவைப் பற்றி நெட்டிசன்கள் கூறிய கருத்துக்கள் இதோ:

ஏ.ஆர்.முருகதாஸ் பற்றி:

1. அடுத்தவன் கதைய திருடிட்டு கள்ள ஒட்டு பத்தி பேசுறதுக்கு எல்லாம் பேரு என்ன தெரியுமா?

2. என்னண்ணே இப்படி ஒத்துக்கிட்டிங்க …இப்போ அடுத்து என்னைய பாப்பானுங்க (அட்லி
மைண்ட் வாய்ஸ்)

3. இதை அப்பவே செஞ்சிருக்கலாமே! எதுக்கு பர்னிச்சரை எல்லாம் உடைச்சுக்கிட்டு ? (தக்காளி
இதுக்கு ஏன்டா, யூ டர்னுலாம் போட்டு, டேபிள் சேரைலாம் ஒடச்சிட்ருந்தே…)

4. இதை முதல்லயே பண்ணி இருக்கலாம். என்னா பேச்சு? பாவ புண்ணிய டயலாக்லாம் வேற…
விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் முட்டுக் கொடுத்தல்கள். ஆனா உண்மை என்னன்னு தெரியாம தன்
படமாவே இருந்தாலும் கூட… யார் பக்கமும் அவசரப்பட்டு பேசக் கூடாதுங்கற விஜயோட
நிதானம் பக்குவம்

5. இவரே அடுத்தவன் தைய திருடி எடுப்பாராம். இதுல காத்துல ஊழல்,கரண்ட்டுல ஊழல்
வசனம் யோக்கிய புன்னகையிட்டம் வசனம் வைப்பாராம்…

6. நீ திருடினதக்கூட மன்னிச்சுடுவேன் டா
பிள்ளைய சுமக்குறோம் அப்பன்னு பெயரெடுக்க வர்றானுக னு விட்டியேடா ஒரு டயலாக்.

7. முதலிலேயே கேட்டிருந்தால் ஏதோ ஒரு தொகைக்கு கொடுத்திருப்பார். இப்போது, தொகையும்
அதிகம். மக்கள் கவனத்திற்கும் கொண்டுவரப் பட்டுள்ளார்.

எழுத்தாளர் ஜெயமோகன் பற்றி:

ஓ மை ஆசானே… கடைசில சினிமாவல தான் அசிங்கப்பட்டு போவணும்னு இருக்கு…

இயக்குனர் பாக்யராஜ் பற்றி :

1. “விலைபோகாத உண்மையும்

வளையாத நேர்மையும்”

மதிப்பும்.. மரியாதையும்!!

2. பாக்கியராஜ் ஜனரஞ்சகமான படங்கள் எடுப்பவர். தன் படங்களில் பெரிய அளவில் நீதி,
நேர்மை பேசுவது கிடையாது. ஆனால் நிஜ வாழ்க்கையில் நேர்மையான நபராகவே
இருந்துள்ளார்.

வருண் ராஜேந்திரனுக்கு வாழ்த்து சொல்றது முக்கியம், எவ்வளவு பெரிய ஆட்களோட மோதி
சாதிச்சிருக்காரு…

உதவி இயக்குனர் வருண் பற்றி :

1. நான் அறிந்தவரையில், நீதிமன்றம் சென்று வழக்கின் இடையிலேயே வென்று வந்த அப்பாவி
எழுத்தாளர் இவர்தான், ஒரு பெரிய பேனருக்கு எதிராகவே.

நடிகர் விஜயைப் பற்றி :

தளபதி விஜயின் நிலைப்பாடு என்ன ?

திரையில், கள்ள ஓட்டு போட்டதுக்கு, ஆவேசம் படும் விஜய்.. நிஜத்தில் கல்லகதையில்
நடித்ததற்கு, முருகதாஸ்க்கு என்ன தண்டனை குடுக்கப்போகிறார்…

இது விஜயின் தவறு இல்ல, ஆனால் தட்டிகேக்காவிட்டால், தவறாகிவிடும்

2. வினோத் க்கு ஏற்ற நடிகர் விஜய் தான்.
தீரன் மாதிரி ஒரு உண்மை சம்பவத்தை வச்சு விஜய் க்கு ஒரு படம் வினோத் கொடுக்கணும்.

ஏ. ஆர். முருகதாசை வச்சு செய்த சன்பிக்சர்ஸ்:

அரசியல்வாதிகளை நம்பினால் என்ன ஆகும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. நாங்க செஞ்ச ஊழல பத்தியா பேசுற இருடி மவனே உன்ன சரியான நேரம் பாத்து கவுத்து விட்றோம்
என்பதுபோல நேக்காக இந்தப் படத்தின் மூலமாக ஏ. ஆர். முருகதாசை கவுத்துவிட்டு வேடிக்கைப் பார்க்கிறது.

கத்தி படத்தை தயாரித்த லைக்கா தயாரிப்பு நிறுவனமும் தற்போது ஏ.ஆர்.முருகதாசின்
எதிரணியில் இருக்கிறது. இந்தியிலும் லேசான சறுக்கல். சமீபத்தில் வெளியான ஸ்பைடர் பலத்த அடி வாங்கியது. அடுத்து ரஜினியுடன் பண்ண இருக்கும் படம் கேள்விக்குறி. ஏ.ஆர். முருகதாசுக்கு இது ஏழரை சனி நடக்கும் காலம் போல.

The post பாக்யராஜின் நேர்மையை பாராட்டும் ரசிகர்கள்! – சர்கார் படத்திற்கு நேர்ந்த அவமானம்! appeared first on TON தமிழ் செய்திகள்.This post first appeared on Tamil News Online, please read the originial post: here

Share the post

பாக்யராஜின் நேர்மையை பாராட்டும் ரசிகர்கள்! – சர்கார் படத்திற்கு நேர்ந்த அவமானம்!

×

Subscribe to Tamil News Online

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×