Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

கொழும்பில் UNP மேயர் வேட்பாளராக ரோஸி - பிரதி மேயர் பதவிக்கு பலத்த போட்டி

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் மேயர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ரோஸி சேனாநாயக போட்டியிடவுள்ளார் என அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
ரோஸி சேனாநாயக தற்போது பிரதமர் ரணில் விக்கரமசிங்கவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் பிரதானியாக செயற்பட்டு வருகின்றார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதன் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் 100 நாள் அரசாங்கம் அமைக்கப்பட்டது. இந்த 100 நாள் அரசாங்கத்தில் சிறுவர் மற்றும் மகளிர் விவகாரம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக ரோஸி சேனாநாயக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் பிரதமரின உத்தியோகபூர்வ அலுவல்கள் தொடர்பான உயர் பிரதானியாக பதவி வகித்துவரும் இவர் அடுத்த வருடம் நடைபெறவுள்ள கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் மேயர் வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.
இந்நிலையில், அக்கட்சி சார்பு பிரதி மேயர் பதவிக்கு பலத்த போட்டி நிலவுவதாக அறியக்கிடைக்கிறது.

கொழும்பு மாநகர சபையை ஐக்கிய தேசியக் கட்சி, கைப்பற்றினால் பிரதி மேயர் பதவி முஸ்லிம் ஒருவரை வந்தடைவதற்கான வாய்ப்பு உள்ள நிலையிலேயே அப்பதவியை கைப்பற்ற முஸ்லிம் பிரமுகர்கள் சிலர் கடும் போட்டியில் இறங்கியுள்ளதாக அறியவருகிறது.

இதுதொடர்பிலான முக்கிய கூட்டமொன்று கடந்த திங்கட்கிழமை (04) மலிக் சமரவிக்கிரமவின் வீட்டில் நடைபெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


This post first appeared on Online Ceylon, please read the originial post: here

Share the post

கொழும்பில் UNP மேயர் வேட்பாளராக ரோஸி - பிரதி மேயர் பதவிக்கு பலத்த போட்டி

×

Subscribe to Online Ceylon

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×