Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது

ஆர்.கே.நகர் தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் வருகிற 21-ந்தேதி நடக்கிறது. அதில் அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், பா.ஜனதா சார்பில் கரு.நாகராஜன் மற்றும் சுயேட்சையாக டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட 59 பேர் போட்டியிடுகின்றனர்.

அதை தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் களை கட்டியுள்ளது. அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களுக்குரிய சின்னங்கள் பொருத்தும் பணி இன்று நடந்தது.

தண்டையார்பேட்டையில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த இப்பணியை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகே யன், போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

அதன் பின்னர் போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறிய 84 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விதிமுறை மீறி செயல்பட்டதாக அ.தி.மு.க. பிரமுகர் ஆவடி குமாரின் கார் இன்று பறிமுதல் செய்யப்பட்டது.

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 15 துணை ராணுவ கம்பெனி படையினர் கேட்டிருந்தோம். அவர்களில் அதிகாலை 5 கம்பெனி துணை ராணுவத்தினர் வந்துள்ளனர். மேலும் 6 கம்பெனி துணை ராணுவ படையினர் வந்துள்ளனர். மீதிப்பேர் இன்னும் ஓரிரு நாளில் வந்து சேருவார்கள்.

விதிகளை மீறி செயல்பட்டதாக புகார் கூறியதின் பேரில் ஆர்.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் மாற்றப்பட்டுள்ளார். தேர் தல் அமைதியாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் காவல் துறை மேற்கொண்டுள்ளது. தேர்தலின் போது எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாது. மக்கள் அச்சமின்றி பாதுகாப்பான முறையில் வாக்களிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்று தொடங்கியது. அதில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலைக்குள் சின்னம் பொருத்தும் பணி முடிவடைந்து விடும்.

வாக்குப்பதிவு எந்திரத்தில் 59 வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தப்படுகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 258 வாக்கு சாவடிகள் உள்ளன.

ஓட்டு போட்டவுடன் எந்த சின்னத்தில் வாக்களித்தார்கள் என்பதை அறிய வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படும். அதற்காக 323 எந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×