Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

அசோக்குமார் தற்கொலை வழக்கில் தலைமறைவான அன்புச்செழியனை தேடி தனிப்படை மதுரை விரைந்தது

திரைப்பட இணை தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை விவகாரத்தில் தலைமறைவாக உள்ள சினிமா பைனான்சியர் அன்புச் செழியனை பிடிக்க தனிப்படை போலீஸார் மீண்டும் மதுரை விரைந்துள்ளனர்.

இயக்குநரும் நடிகருமான சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் (43). திரைப்பட இணை தயாரிப்பாளராக இருந்து வந்தார். இவர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் கடந்த 21-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முன்னதாக தற்கொலைக்கான காரணம் குறித்து 2 பக்கங்களில் கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் பற்றி குறிப்பிட்டு இருந்தார். இதைத் தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக அன்புச் செழியன் மீது வளசரவாக்கம் போலீஸார் வழக்கு பதிந்தனர்.

போலீஸார் தேடுவதை அறிந்த அன்புச்செழியன் கடந்த 21-ம் தேதி முதல் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க தியாகராயநகர் துணை ஆணையர் அரவிந்தன் மேற்பார்வையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீ ஸார் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களி லும் கேரளா, ஆந்திராவுக்கும் விரைந்தனர். ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியாததால் சென்னை திரும்பினர். சென்னையில் தொடர் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

நண்பர்கள், உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அவரது மேலாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனாலும், அன்புச் செழியன் இருக்கும் இடத்தை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்புச்செழியன் செல்போன் பேச்சை முழுவதும் தவிர்த்து வருவதாகவும், நண்பர்கள் உறவினர்கள் என யாரிடமும் தொடர்பு கொள்ளாமல் இருப்பதாலும் அவரை நெருங்குவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அவரை பிடிக்க தனிப்படை போலீஸார் மதுரைக்கு மீண்டும் விரைந்துள்ளனர்.

The post அசோக்குமார் தற்கொலை வழக்கில் தலைமறைவான அன்புச்செழியனை தேடி தனிப்படை மதுரை விரைந்தது appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

அசோக்குமார் தற்கொலை வழக்கில் தலைமறைவான அன்புச்செழியனை தேடி தனிப்படை மதுரை விரைந்தது

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×