Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக ஹசன் ஆரூண் தேர்வு

தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக முன்னாள் எம்.பி ஜே.எம்.ஆரூணின் மகன் ஹசன் ஆரூண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் 2012-ம் ஆண்டுக்குப் பின்னர் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் தமிழகம் முழுவதும் கடந்த நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 3-ம் தேதி வரை 4 நாட்கள் நடந்தன. செல்போன் ஆப் மூலம் நடைபெற்ற இந்தத் தேர்தல் முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டன. இதில், மாநிலத் தலைவராக ஹசன் ஆரூண் தேர்வு செய்யப்பட்டார். இவர் முன்னாள் எம் பி ஜே.எம்.ஆரூணின் மகன் ஆவார்.

துணைத் தலைவர்களாக பிரபுதாஸ், பாக்கியராஜ், லெனின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னாள் எம்எல்ஏ ஊர்வசி செல்வராஜின் மகன் அமிர்தராஜ் உட்பட 11 பேர் மாநில பொதுச் செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், மாவட்ட தலைவர்கள், சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

The post தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக ஹசன் ஆரூண் தேர்வு appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக ஹசன் ஆரூண் தேர்வு

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×