Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

தொடர்ந்து 10-வது முறையாக ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவராக லல்லு பிரசாத் தேர்வு

பீகார் மாநிலத்தில் முக்கிய கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் பதவிக்கு தொடர்ந்து 10-வது முறையாக முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலத்தில் முக்கிய கட்சியாக திகழும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட கடந்த 12-ம் தேதி மனுக்கள் பெறப்பட்டது. இதில், தற்போதைய தலைவராக உள்ள முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், தலைவர் பதவிக்கு லல்லு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக உள்கட்சி தேர்தல் அதிகாரி இன்று அறிவித்துள்ளார். தொடர்ந்து 10-வது முறையாக லல்லு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1997-ம் ஆண்டு கட்சி தொடங்கப்பட்ட போது லல்லு பிரசாத் யாதவ் தலைவராக முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

The post தொடர்ந்து 10-வது முறையாக ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவராக லல்லு பிரசாத் தேர்வு appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

தொடர்ந்து 10-வது முறையாக ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவராக லல்லு பிரசாத் தேர்வு

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×