Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

2018-இல் ஐபோன் SE 2 வெளியாகலாம்

சீனாவில் இருந்து வெளியாகியுள்ள தகவல்களின் படி ஐபோன் SE 2 ஸ்மார்ட்போனினை ஆப்பிள் நிறுவனம் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. முந்தைய மாடலை போன்று இந்த ஸ்மார்ட்போனும் சிறியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2018 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு ஐபோன் X வடிவமைப்பு வழங்கப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், ஐபோன் SE மாடல் 2018-ம் ஆண்டின் முதல் பாதியில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

வழக்கமான ஐபோன் வடிவமைப்பு மற்றும் ஹோம் பட்டன்களை ஐபோன் SE 2  கொண்டிருக்கும் என கூப்படுகிறது. இத்துடன் 4.0 இன்ச் ஸ்கிரீன் மற்றும் ஆப்பிளின் புதிய A10 பிராசஸர் மற்றும் டச் ஐடி உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படும் டூயல் கேமரா அம்சம் ஐபோன் SE 2 மாடலில் இடம்பெறாது என்றும் ஒற்றை பிரைமரி கேமரா மட்டுமே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் ஐபோன் SE ஸ்மார்ட்போன் 32 ஜிபி மாடல் ரூ.21,859க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ஐபோன் SE 2 விலை 450 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.29,265 என நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் 2018-ம் ஆண்டில் மூன்று ஐபோன் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிடலாம் என கூறப்பட்டது.

இத்துடன் புதிய ஐபோன்களில் அதிவேக இன்டெல் XMM 7560 மோடெம், குவால்காம் SDX 20 LTE cat மோடெம் கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளார். இந்த சிப்செட்கள் 4x4 MIMO தொழில்நுட்பத்தில் இயங்கும், இது இந்த ஆண்டு ஐபோன்களில் வழங்கப்பட்டதை விட இருமடங்கு வேகமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post 2018-இல் ஐபோன் SE 2 வெளியாகலாம் appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

2018-இல் ஐபோன் SE 2 வெளியாகலாம்

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×