Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

விற்பனைக்கு முன் வெளியான ஒன்பிளஸ் 5T வீடியோ: உண்மை வெளியானது

ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் விற்பனை இந்தியாவில் இன்று துவங்க இருக்கிறது. முன்னதாக ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் அறிமுக வீடியோ, அன்பாக்சிங் உள்ளிட்டவை தொடர்ந்து வெளியிடப்பட்ட நிலையில், 5T ஸ்மார்ட்போனின் டியூரபிலிட்டி டெஸ்ட் வீடியோ யூடியூபில் பதிவிடப்பட்டுள்ளது.

ஜெர்ரி ரிக் எவ்ரிதிங் என்ற சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், ஒன்பிளஸ் 5T கத்தி, பிளேடு, நெருப்பு உள்ளிட்டவை கொண்டு சோதிக்கப்பட்டது. ஐந்து நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவில் ஒன்பிளஸ் 5T தரத்தை உறுதி செய்ய இந்த சோதனைகள் செய்யப்பட்ட நிலையில், போனிற்கு அதிகப்படியான பாதிப்பு ஏற்படவில்லை.

இந்தியாவில் ரூ.32,999 விலையில் துவங்கும் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை இன்று (நவம்பர் 21) மாலை 4.30 மணிக்கு துவங்குகிறது. அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் ஒன்பிளஸ் 5T பிரைம் வாடிக்கையாளர்கள் சரியாக 4.30 மணிக்கு வாங்க முடியும்.

இத்துடன் ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் உள்ளிட்டவற்றிலும் அதே நேரத்தில் வாங்கிட முடியும். இதன் ஓபன் சேல் நவம்பர் 28-ம் தேதி துவங்குகிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்ப்ளே கொண்ட ஒன்பிளஸ் 5T முதல் விற்பனை அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கானது ஆகும்.

ஒன்பிளஸ் 5T சிறப்பம்சங்கள்:

- 6.01 இன்ச் 2106x1080 பிக்சல் ஃபுல் எச்டி+ ஆப்டிக் AMOLED 2.5D வளைந்த டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 64-பிட் 10nm பிராசஸர்
- அட்ரினோ 540 GPU
- 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபிஇன்டெர்னல் மெமரி
- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் சார்ந்த ஆக்சிஜன்ஓ.எஸ். 4.7, ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்
- டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், சோனி IMX398, f/1.7 அப்ரேச்சர், 1.12μm பிக்சல்
- 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர், சோனி IMX376K, 1.0μm பிக்சல்
- 16 எ்மபி செல்ஃபி கேமரா, சோனி IMX371 சென்சார், 1.0μm பிக்சல், f/2.0 அப்ரேச்சர்
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3300 எம்ஏஎச் பேட்டரி, டேஷ் சார்ஜ்

ஒன்பிளஸ் 5T 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் ரூ.32,999 மற்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் ரூ.37,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஒன்பிளஸ் 5T மிட்நைட் பிளாக் நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது.

The post விற்பனைக்கு முன் வெளியான ஒன்பிளஸ் 5T வீடியோ: உண்மை வெளியானது appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

விற்பனைக்கு முன் வெளியான ஒன்பிளஸ் 5T வீடியோ: உண்மை வெளியானது

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×