Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

முன்னாள் கலெக்டர் சகாயத்துக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீசு

மதுரையைச் சேர்ந்தவர் கே.கே. ரமேஷ். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

2012-ம் ஆண்டு நலிந்தோர்கள் 17 பேருக்கு நிலையூர் பகுதியில் பட்டா மனைகளை அப்போதைய கலெக்டர் சகாயம் வழங்கினார். அதன் பின்னர் அவர்கள் அந்த இடத்தை பார்க்கச் சென்றனர். ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட அந்த இடம் அங்கு இல்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் உரிய பதில் இல்லை.

இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின் போது சகாயம் மாற்றப்பட்டு சுப்பிரமணியன் கலெக்டராக வந்தார்.

அவர் 17 பேருக்கு வழங்கப்பட்ட இலவச பட்டாவுக்கு உரிய இடம் நிலையூர் பகுதியில் உள்ளது என்று தவறான தகவலை கோர்ட்டில் தெரிவித்தார். 17 பேருக்கும் வழங்கப்பட்ட இடத்தை அவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். தற்போதைய கலெக்டர் வீரராகவராவும் அதே பதிலை கூறி வருகிறார்.

எனவே கோர்ட்டுக்கு தவறான தகவலை தெரிவித்த 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று நீதிபதி மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் இது குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், முன்னாள் கலெக்டர்கள் சகாயம், சுப்பிரமணியன் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

The post முன்னாள் கலெக்டர் சகாயத்துக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீசு appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

முன்னாள் கலெக்டர் சகாயத்துக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீசு

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×