
ராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க உள்ளதாக மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை தெரிவித்தார்.
கரூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய கடலோர கப்பல் படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அனைத்து அமைச்சர்களையும் அழைத்து விவாதித்த பின்பு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க உள்ளோம்.
எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் ஆலமரம் போல வளர்க்கப்பட்ட இந்த இயக்கம், பெரியாரின் திராவிடன், தமிழன் என்ற உணர்வுடன் இருப்பதால் யாராலும் அழிக்க முடியாது. அதிமுகவை நடிகர் கட்சி எனக்கூறி கருணாநிதி அழிக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. இது வாரிசு இயக்கம் அல்ல. மக்கள் இயக்கம். அதிமுகவின் தொண்டர்கள் மற்றும் மக்கள்தான் கட்சியின் வாரிசு.
போயஸ் கார்டனில் சிங்கம் போல வசித்தவர் ஜெயலலிதா. அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனும் அந்த இடத்தை கோயிலாக நினைக்கிறான். அங்கு இனி மனதைப் புண்படுத்தும் வகையில் எந்த ஒரு நிகழ்வும் நடக்கக்கூடாது என்றார். அப்போது மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உடன் இருந்தார்.
The post மத்திய பாதுகாப்பு அமைச்சரை சந்திப்போம் appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.