Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

இலங்கை கடற்படையின் நடவடிக்கையை முடக்க வேண்டும்: பொன். ராதாகிருஷ்ணன் கருத்து

தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளை சிறிது காலம் முடக்கி வைத்தால் சரியாக இருக்கும் என மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவது மிகவும் வேதனை தரக்கூடிய விஷயம். இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய திட்டத்தை தீட்டியுள்ளார். மீனவர்கள் அதனை அறிவர்.

மீனவர்களுக்கு மானிய விலையில் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்க ரூ.1,500 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல் கட்டமாக மத்திய அரசு சார்பில் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ராமேசுவரம் மீனவர்களுக்கு கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் படகுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தமிழக மீனவர்கள் பாதிக்கப்படும்போது, தனது வீட்டில் ஒரு சம்பவம் நடைபெறுவது போல் உணர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளை சிறிது காலம் முடக்கி வைத்தால் சரியாக இருக்கும் என கருதுகிறேன். இந்த விஷயத்தில் இலங்கை அரசுக்கு மத்திய அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து கொண்டுதான் இருக்கிறது. அதேநேரத்தில் எடுத்தேன், கவிழ்த்தேன் என நடவடிக்கை எடுக்க முடியாது என்று அவர் கூறினார்.

The post இலங்கை கடற்படையின் நடவடிக்கையை முடக்க வேண்டும்: பொன். ராதாகிருஷ்ணன் கருத்து appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

இலங்கை கடற்படையின் நடவடிக்கையை முடக்க வேண்டும்: பொன். ராதாகிருஷ்ணன் கருத்து

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×