Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

முட்டை விலை உயர்ந்ததால் ஆம்லெட் விலையும் அதிகரிப்பு

முட்டை விலை உயர்ந்துள்ளதால் ரூ.10-க்கு விற்கப்பட்ட ஆம்லெட் தற்போது ரூ.15 முதல் ரூ.20 வரை விற்கப்படுகிறது.

முட்டை உற்பத்தி குறைந்து தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலையும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.5 வரை விற்பனையான முட்டை விலை சில நாட்களுக்கு முன் ரூ.6-ஆக உயர்ந்தது. டெல்லியில் நேற்று முட்டை விலை ரூ.7-ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு முட்டை விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் ஹோட்டல் உரிமையாளர்கள் ஆம்லெட் விலையையும் உயர்த்தியுள்ளனர்.

விலை உயர்வுக்கு முன்பு வரை சாதாரண கடைகளில் ஆம்லெட் ரூ.10-க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.15 முதல் ரூ.20 வரை விற்கப்படுகிறது. இனிவரும் காலம் குளிர்காலம் என்பதால் உணவில் முட்டையை சேர்த்துக்கொள்ளும் அசைவப்பிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால், முட்டையின் தேவையும் மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஓட்டல் உரிமையாளர்கள் சிலர் கூறும்போது, “ஆம்லெட் போடுவதற்கு பெரும்பாலும் பெரிய வெங்காயத்தைத்தான் பயன்படுத்துகிறோம். தற் போது சின்ன வெங்காயம் மட்டுமல்லாமல் பெரிய வெங்காயம் விலையும் அதிகரித்து உள்ளது.

ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.45 முதல் ரூ.60 வரை விற்கப்படுகிறது. அதோடு, முட்டை விலையும் உயர்ந்துள்ளதால் ஆம்லெட், ஆஃப்பாயில், பிரெட் ஆம்லெட் ஆகியவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால், விற்பனை சற்று குறைந்துள்ளது. இந்த விலை உயர்வு தற்காலிகமாக இருக்கும் என நம்புகிறோம். ஜனவரியில் விலை குறைய வாய்ப்பு உள்ளது” என்றார்.

The post முட்டை விலை உயர்ந்ததால் ஆம்லெட் விலையும் அதிகரிப்பு appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

முட்டை விலை உயர்ந்ததால் ஆம்லெட் விலையும் அதிகரிப்பு

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×