Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

மூர்க்கத்தனமாக நடந்த கொண்ட அதிகாரி: இண்டிகோ ஏர்லைன்ஸ் மீது பிவி சிந்து பாய்ச்சல்

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாக, அந்த நிறுவனம் மீது பிவி சிந்து சாடியுள்ளார்.

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து. இவர் ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் மூலம் சொன்றார். இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கடைநிலை அதிகாரி ஒருவர் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாக டுவிட்டரில் சாடியுள்ளார்.

இதுகுறித்து பிவி சிந்து தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘கடைநிலை அதிகாரி அஜீதேஷின் நடவடிக்கை மிகவும் மோசமாக இருந்தது. என்னிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டார். பயணிகளுடன் நல்லமுறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று ஏர்ஹோஸ்டர் ஆஷிமா அவருக்கு அட்வைஸ் கூற முயற்சி செய்தார்.

ஆனால், ஏர்ஹோஸ்டர் இடம் அவர் நடந்து கொண்ட விதம் எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. இதுபோன்றவர்களை ஊழியர்ளை வேலைக்கு வைத்தால், ஏர்லைன்சின் நற்பெயருக்கு கலங்கம் விளைவித்துவிடுவார்கள்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் பிவி சிந்துவின் குற்றச்சாட்டை இண்டிகோ ஏர்லைன்ஸ் மறுத்துள்ளது.

The post மூர்க்கத்தனமாக நடந்த கொண்ட அதிகாரி: இண்டிகோ ஏர்லைன்ஸ் மீது பிவி சிந்து பாய்ச்சல் appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

மூர்க்கத்தனமாக நடந்த கொண்ட அதிகாரி: இண்டிகோ ஏர்லைன்ஸ் மீது பிவி சிந்து பாய்ச்சல்

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×