Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

பா.ஜ.க நிலைப்பாட்டை மாற்றவில்லை எனில் மதம் மாறுவேன் மாயாவதி மிரட்டல்

சாதி, மதம் விஷயங்களில் பாஜவினர் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி கொள்ளவில்லை என்றால், மதம் மாறப்போவதாக மாயாவதி தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான மாயாவதி நேற்று அஸாம் கார்க் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

பாரதீய ஜனதாவினர்  ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சாதி, மதம் தொடர்பாக தங்களது நிலைப்பட்டினை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோரை இந்து மதத்தில் இருந்து புத்தமதத்துக்கு மாற்றும் நிலை ஏற்படும்.

கோடிக்கணக்கான மக்களுடன் நானும் மதம் மாறுவேன். கோயில்களை கட்டுவதால் ஏழைகளுக்கு எவ்வித பயனும் கிடைக்கப்போவதில்லை. தலித்துகள், பழங்குடியினர் புறக்கணிக்கப்படுகின்றனர்.

மேலும், வறுமை, வேலையின்மைக்கு முடிவு ஏற்படபோவதில்லை. கல்வி, அரசியல், வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை உரிமைகள் ஏழைகளுக்கு மறுக்கப்படுகின்றன. இவ்வாறு மாயாவதி பேசினார்.

The post பா.ஜ.க நிலைப்பாட்டை மாற்றவில்லை எனில் மதம் மாறுவேன் மாயாவதி மிரட்டல் appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

பா.ஜ.க நிலைப்பாட்டை மாற்றவில்லை எனில் மதம் மாறுவேன் மாயாவதி மிரட்டல்

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×