Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

65 சதவீத பாலியல் துஷ்பிரயோகங்கள் சுய விருப்பத்துடன் நடப்பவை

கிடைக்கப்பெறும் பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகளில் 65 சதவீதமானவை பெண்களின் சம்மதத்துடன் நடப்பவை என பொலிஸ் பகுப்பாய்வு புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது.

அப் புள்ளிவிபர தகவலின் படி 2016 ஆம் ஆண்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள் மொத்தமாக 2036 ஆகும். இதில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களின் பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள் 350ம், 16 வயதிற்குட்பட்ட பாலியல் துஷ்பிரயோக    முறைப்பாடுகள் 1686ம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

16 வயதிற்குட்பட்ட யுவதிகள் சுய விருப்பத்துடன் ஆணுடன் உறவு கொண்டாலும் பாலியல் துஷ்பிரயோகம் என்றே கருதப்படும்.

இவர்களில் 1394 யுவதிகள் அவர்களின் சம்மதத்தினுடையே ஆண்களுடன் உறவு கொண்டுள்ளனர். எனவே உண்மையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானோரின் எண்ணிக்கை 292 ஆகும்.

இதன் படி கடந்த வருடத்தில் உண்மையாக மொத்தமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பெண்களின் எண்ணிக்கை 642 ஆகும். எனவே சதவீத பகுப்பாய்வின் 65 சதவீத பாலியல் துஷ்பிரயோகங்கள் சுய விருப்பத்துடன் நடந்தவை என்று தெரிவிக்கப்படுகின்றது.

The post 65 சதவீத பாலியல் துஷ்பிரயோகங்கள் சுய விருப்பத்துடன் நடப்பவை appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

65 சதவீத பாலியல் துஷ்பிரயோகங்கள் சுய விருப்பத்துடன் நடப்பவை

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×