Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

கிறிஸ் லின்னை 5 வருடத்திற்கு ஒப்பந்தம் செய்தது பிரிஸ்பேன் ஹீட்

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் லீக் தொடரைப் போல் ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் டி20 கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது.

2017-18 சீசனுக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. தேவையில்லாத வீரர்களை நீக்கியும், தேவைப்படும் வீரர்களை ஒப்பந்தம் செய்யும் வேலையிலும் அணிகள் களம் இறங்கியுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் கிறிஸ் லின். இவரை 2021-22-ம் ஆண்டு சீசன் வரை ஐந்து ஆண்டுகளுக்கு பிரிஸ்பேன் ஹீட் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. கிறிஸ் லின்னிற்கு அந்த அணி வருடத்திற்கு தலா ஒரு மில்லியன் டாலர் சம்பளமாக கொடுக்கிறது.

பிக் பாஷ் லீக் தொடரில் ஒரு வீரர் அதிகமாக வாங்கும் சம்பளம் இதுவே. இதன்மூலம் அதிக சம்பளத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் என்ற பெருமையை கிறிஸ் லின் பெற்றுள்ளார். கிறிஸ் லின் கடந்த 2011-ம் ஆண்டில் இருந்தே பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

The post கிறிஸ் லின்னை 5 வருடத்திற்கு ஒப்பந்தம் செய்தது பிரிஸ்பேன் ஹீட் appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

கிறிஸ் லின்னை 5 வருடத்திற்கு ஒப்பந்தம் செய்தது பிரிஸ்பேன் ஹீட்

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×