Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

"அரசியல்வாதிகளுக்கு துதிபாடுவது துர்ப்பாக்கியமானது" ஜனாதிபதி

ஊடகவியலாளர்கள்  மற்றும் பத்திரிகையாளகள் எப்போதும் சரியானவற்றை தெரிவுசெய்து, உண்மைக்கு மதிப்பளித்து தமது பேனா முனைகளை பாவிக்க வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி, சுயலாபத்துக்காக தவறு செய்யும் அரசியல்வாதிகளை பாதுகாத்து, அவர்களுக்கு ஊடகவியலாளர்கள் துதிபாடுவது மிகவும் துர்ப்பாக்கியமானது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று முற்பகல் கொழும்பிலுள்ள  நூலக ஆவணமாக்கல் சபையில் நடைபெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளரான அமரர் டி.பி.தனபாலவின் நினைவு முத்திரை வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எவ்வளவு தவறிழைத்தாலும் அவர்கள் தொடர்பில் குறிப்பிடாமல் இருப்பதும், எவ்வளவு சரியானதாக இருந்தாலும் சிலரை இலக்கு வைத்து தாக்குவதனையும் இன்று ஊடகங்களில் காணக் கூடியதாக உள்ளது என தெரிவித்த ஜனாதிபதி, மக்களுக்காக சரியான, தரமான, பெறுமதியானவற்றை சமூகத்துக்கு வழங்குவது அடுத்த சந்ததிக்காக ஊடகவியலாளர்கள் தமது பேனா முனையினால் ஆற்ற வேண்டிய பணியாகும் எனவும் குறிப்பிட்டார்.

முன்மாதிரியான  பத்திரிகையாளர் டி.பி.தனபாலவினது சமூக செயற்பாடுகளை ஜனாதிபதி அதன்போது பாராட்டினார்.

டி.பி.தனபாலவினது நினைவு முத்திரை ஜனாதிபதியால் சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கும், டி.பி.தனபாலவினது பேரனான கலாநிதி தனுஷ்க மீகஹவத்தவிற்கும் வழங்கப்பட்டது.

The post "அரசியல்வாதிகளுக்கு துதிபாடுவது துர்ப்பாக்கியமானது" ஜனாதிபதி appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

"அரசியல்வாதிகளுக்கு துதிபாடுவது துர்ப்பாக்கியமானது" ஜனாதிபதி

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×