Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

பாராளுமன்ற ஆலோசனைக் குழுவில் இருந்து மூத்த தலைவர் முகுல் ராய் நீக்கம்: திரிணாமுல் காங். அதிரடி

 மத்திய உள்துறையின் பாராளுமன்ற ஆலோசனைக் குழுவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.பி.யான முகுல் ராய் இடம்பெற்றிருந்தார். அவரை ஆலோசனைக்குழுவில் இருந்து நீக்கிவிட்டு, அவருக்குப் பதில் மாநிலங்களவை உறுப்பினர் மணீஷ் குப்தாவை திரிணாமுல் காங்கிரஸ் நியமித்துள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடிதம் அனுப்பி உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த குப்தா, இந்த ஆண்டு மார்ச் மாதம் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது பாராளுமன்ற குழுவில் இடம்பெற்றுள்ளார்.

சாரதா சிட்பண்ட் முறைகேடு தொடர்பாக முகுல் ராய் சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் இருந்ததால், அவர் 2015-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த வாரம் போக்குவரத்து சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டு, அந்த பதவிக்கு டெரிக் ஓ பிரையன் நியமிக்கப்பட்டார்.

கட்சியில் ஒரு காலத்தில் செல்வாக்குமிக்க நபராக விளங்கிய முகுல் ராய், பா.ஜ.க. தலைவர்களுடன் நெருக்கமாக பழகத் தொடங்கியதாக தகவல்கள் வெளியாகின. இது கட்சி தலைவர் மம்தாவின் கவனத்திற்கு சென்றதில் இருந்து, முகுல் ராயின் செல்வாக்கு சரியத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

The post பாராளுமன்ற ஆலோசனைக் குழுவில் இருந்து மூத்த தலைவர் முகுல் ராய் நீக்கம்: திரிணாமுல் காங். அதிரடி appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

பாராளுமன்ற ஆலோசனைக் குழுவில் இருந்து மூத்த தலைவர் முகுல் ராய் நீக்கம்: திரிணாமுல் காங். அதிரடி

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×