Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

பிரிக்ஸ் உச்சி மாநாடு: பிரதமர் மோடி சீனா புறப்பட்டு சென்றார்

 புதுடெல்லி:

இந்தியா, சீனா, பிரேசில், ரஷியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு ‘‘பிரிக்ஸ்’’ எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் தலைவர்கள் ஆண்டுக்கு ஒரு தடவை சந்தித்து பேசுவது வழக்கம். உலகளாவிய பொருளாதார மேம்பாட்டை மேற்கொள்ள இந்த மாநாட்டில் பேசப்படும்.

கடந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டை கோவாவில் இந்தியா நடத்தியது. அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டார். இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் மாநாடு சீனாவின் சியாமென் நகரில் இன்று முதல் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் புது டெல்லியில் தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். பிரிக்ஸ் மாநாட்டின்போது சீன அதிபரை சந்தித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டோக்கலாம் எல்லைப்பகுதியில் சீனாவும் இந்தியாவும் படைகளை திரும்ப பெற்று பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்ட பின்னர், பிரிக்ஸ் மாநாட்டின்போது இந்தியா-சீனா பிரதமர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது.

சீனா பயணத்தை நிறைவு செய்யும் பிரதமர் மோடி, வரும் 5-ம் தேதி மியான்மர் நாட்டுக்கு செல்கிறார். இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்ற பின்னர் முதன்முதலாக மியான்மர் நாட்டுக்கு செல்லும் அவர் வரும் 7-ம் தேதிவரை அங்கு தங்குகிறார்.

தலைநகர் நைபிடாவில் மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி-யை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தியாவின் உதவியுடன் மியான்மரில் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக அவர் கேட்டறிகிறார்.

மேலும், இந்திய வம்சாவளி மக்கள் அதிகமாக வாழும் யாங்கூன் மற்றும் பாகான் பகுதிகளுக்கு செல்லும் அவர், அவர்களிடையே சிறப்புரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post பிரிக்ஸ் உச்சி மாநாடு: பிரதமர் மோடி சீனா புறப்பட்டு சென்றார் appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

பிரிக்ஸ் உச்சி மாநாடு: பிரதமர் மோடி சீனா புறப்பட்டு சென்றார்

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×