Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

சாத்தூர் அருகே 2 கிராம மக்கள் மோதல்: போலீஸ் குவிப்பு - 16 பேர் கைது

 விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ளது கோபாலபுரம். இதன் அருகில் எரவார்பட்டி கிராமம் உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த மாணவர்கள் பஸ்சில் சென்ற போது தகராறு ஏற்பட்டது. இதில் சிலர் தாக்கப்பட்டனர்.

இந்த ஆத்திரத்தில் எரவார்பட்டியை சேர்ந்த கிராமமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் கோபாலபுரம் சென்று அங்குள்ளவர்களை தாக்கினர். இதை தொடர்ந்து இருதரப்புக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது. கம்பு, கற்களால் மோதிக் கொண்டனர். 10-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அந்த பகுதியே போர்க்களம்போல் காட்சி அளித்தது.

தகவல் அறிந்த சாத்தூர் போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியபோது மீண்டும் சிலர் தாக்குதல் நடத்தினர். இதில் ஆயுதப்படை போலீஸ்காரர்கள் அய்யாச்சாமி, பாண்டியராஜன் மற்றும் 2 பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

மோதல் சம்பவம் தொடர்பாக 2 கிராமங்களை சேர்ந்த 16 பேரை சாத்தூர் போலீசார் கைது செய்தனர். மேலும் 2 கிராமங்களிலும் தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மோதல் தொடர்பாக சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post சாத்தூர் அருகே 2 கிராம மக்கள் மோதல்: போலீஸ் குவிப்பு - 16 பேர் கைது appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

சாத்தூர் அருகே 2 கிராம மக்கள் மோதல்: போலீஸ் குவிப்பு - 16 பேர் கைது

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×