Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

காஷ்மீர் வக்கீல்கள் சங்க தலைவருக்கு என்.ஐ.ஏ. சம்மன்: நீதிமன்றப் பணிகள் முடங்கின

 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்துவந்த சிலரை என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர் சமீபத்தில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சிலரை விசாரணைக்கு ஆஜராகுமாறு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பி இருந்தது.

சம்மன் அனுப்பபட்டவர்களில் மியான் அப்துல் கய்யூம் என்பவரும் ஒருவராவார். காஷ்மீரில் இயங்கிவரும் பிரிவினைவாத இயக்கமான தெஹ்ரீக்-இ-ஹுரியத் அமைப்பின் தலைவர் சையத் அலி ஷா கிலானிக்கு நெருக்கமான இவர் ஜம்மு-காஷ்மீர் மாநில வக்கீல்கள் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்நிலையில், மியான் அப்துல் கய்யூமுக்கு தேசிய புலனாய்வு அமைப்பினர் சம்மன் அனுப்பியதை கண்டித்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் இன்று கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நீதிமன்றப் பணிகள் முற்றிலுமாக முடங்கின.

நாளையும் இந்த போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீர் ஐகோர்ட் வளாகத்தில் உள்ள வக்கீல்கள் சங்கத்தில் நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் அடுத்தகட்ட போராட்டம் தொடர்பாக ஆலோசித்து தீர்மானிக்கப்படும் என மியான் அப்துல் கய்யூமின் ஆதரவாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

The post காஷ்மீர் வக்கீல்கள் சங்க தலைவருக்கு என்.ஐ.ஏ. சம்மன்: நீதிமன்றப் பணிகள் முடங்கின appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

காஷ்மீர் வக்கீல்கள் சங்க தலைவருக்கு என்.ஐ.ஏ. சம்மன்: நீதிமன்றப் பணிகள் முடங்கின

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×