Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் முகுருஜா, வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி

 ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்று போட்டியில், விம்பிள்டன் சாம்பியனான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6-1, 6-1 என்ற நேர் செட்டில் மக்டலெனா ரைபரிகோவாவை (ஸ்லோவெகியா) வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதிப் பெற்றார்.

இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில், முன்னாள் சாம்பியன் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 7-5, 6-4 என்ற நேர் செட்டில் மரியா சக்காரி (கிரீஸ்) பந்தாடியதுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றையும் உறுதி செய்தனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்றுப்போட்டியில் முன்னணி வீரரான குரோஸியாவின் மரின் சிலிக், அர்ஜெண்டினாவின் தியாகோ ஸ்வார்ட்மேனிடம் 6-4, 5-7, 5-7, 4-6 என்ற செட் கணக்கில் போராடி தோற்று இத்தொடரில் இருந்து வெளியேறினார்.

The post அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் முகுருஜா, வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் முகுருஜா, வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×