Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ஆரியின் விவசாய புரட்சியை பாராட்டிய பிரேமலதா விஜயகாந்த்

 ஸ்ரீ ஆண்டாள் அழகர் இஞ்சினியர் கல்லூரியில் 2017-18 ஆம் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான விழா நடைபெற்றது. இதில் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வி.ராமசந்திரன் மற்றும் நடிகர் ஆரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

அப்போது சிறப்பு விருந்தினர்களை வரவேற்ற அக்கல்லூரியின் சேர்மன் பிரேமலதா விஜயகாந்த் மாணவர்கள் ஒழுக்கம் மற்றும் நேர்மையை கடைபிடித்து இலட்சியத்துடன் படித்தால் வாழ்வில் முன்னேறலாம், அப்படி இலட்சியத்துடன் படிக்கும் மாணவர்களுக்கு இந்த கல்லூரி ஊக்கமும் உறுதுணையும் அளிக்கும் என்றார்.

மேலும் சிறப்பு விருந்தினர் ஆரியின் விவசாய புரட்சி பற்றி பேசிய அவர், ‘இயற்கை விவசாயம் என்பது இப்போது எல்லோருக்கும் தேவை இப்போது விவசாயம் அழிந்து வரும் நிலையில் ஆரி இதுபோன்ற முயற்சி எடுத்து இருக்கிறார். உணவே மருந்து, மருந்தே உணவு என்ற பழமொழிக்கு உயிர் அளித்துள்ளார் என்றவர், ஆம் இப்போதைய சூழ்நிலையில் விவசாயம் அழிந்து வருகிறது. அதேபோல் அனைத்து உணவுகளும் பூச்சி கொல்லிகளால் நஞ்சாக மாறிவிட்டது.

இதனை மாற்ற ஆரி மாறுவோம் மாற்றுவோம் என்ற அறக்கட்டளை மூலம் முயற்சி செய்து வருகிறார். நீங்களும் மாடிதோட்டத்தின் மூலம் இயற்கை உணவு உற்பத்தி செய்து உண்ணுங்கள் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

The post ஆரியின் விவசாய புரட்சியை பாராட்டிய பிரேமலதா விஜயகாந்த் appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

ஆரியின் விவசாய புரட்சியை பாராட்டிய பிரேமலதா விஜயகாந்த்

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×