Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரன் குவிக்கும் முனைப்பில் சதத்தை கொண்டாடாத கவுர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா வலுவான இலக்கை நிர்ணயிக்க முக்கிய காரணமாக இருந்த கவுர் தனது சதத்தை கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டது.

ஆஸ்திரேலியா உடனான நேற்றைய ஆட்டத்தில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் 171 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் வலுவான ஆஸ்திரேலிய அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று மகளிர் உலக கோப்பையின் இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

மகளிர் உலகப் கோப்பையின் நாக் அவுட் போட்டியில் அதிகபட்ச ரன்னை எடுத்த கவுர் தனது சதத்தை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது.

கவுர் 98 ரன்கள் எடுத்திருந்தபோது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பந்தை சற்று அருகாமையில் அடித்துவிட்டு இரு ரன்கள் ஓட எண்ணினார். ஆனால் எதிர்முனையிலிருந்த தீப்தி ஷர்மா ஒரு ரன் வேகமாக ஓடிவிட்டு மறு ரன் ஓட சற்று தயங்கினார். இதனை கவனிதத கவுர் வேகமாக ஓடு என்று கத்திய கொண்ட அந்த பந்தில் இரண்டாவது ரன்னை நோக்கி ஓடினார். அதேவேளையில் தீப்தி சற்று தாமதித்து ஓடியாதால் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் அவரை ரன் அவுட் ஆக்கினார்.

இதனால் கடும் கோபம் அடைந்த கவுர் ஆவேசமாக தீப்தியை நோக்கி கத்திக் கொண்டே தனது ஹெல்மெட்டை தூக்கி வீசினார். இந்த ரன் அவுட் முடிவு மூன்றாவது நடுவரிடம் சென்றது. இதில் தீப்தி ஷர்மா ஆஸ்திரேலியா வீராங்கனைகள் ரன் அவுட் செய்வதற்குள் இலக்கு கோட்டை அடைந்தததால் அவர் நாட் அவுட் என்று அறிவிக்கப்பட்டார். இதனால் இரண்டு ரன்கள் கவுருக்கு வழங்கப்பட்டு அவர் சதத்தை பூர்த்தி செய்தார்.

எனினும் எதிர்பாரமல் நடந்த இந்த சலசலப்பால் கவுர் தனது சதத்தை கொண்டாடவில்லை. தீப்தியை கட்டி பிடித்து நிதானமாக ஆடு என்ற தொனியில் அவரை சமாதானப்படுத்தினார்.

பின்னர் இந்தியாவின் பேட்டிங்கின் முடிவில் கவுரிடம் இது தொடர்பாக வர்ணனையாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த கவுர் கூறும்போது, “வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் குறிப்பது அவசியம். எனவே தீப்தி ரன் அவுட் ஆனவுடன் நான் கோபமடைந்து விட்டேன்.

எனக்கு என்னுடைய விக்கெட் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு அவரின் விக்கெட்டும் முக்கியம். இப்போது நாங்கள் இருவரும் சமாதானம் ஆகிவிட்டோம். எந்தக் கோபமும் இல்லை “என்றார்.

The post ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரன் குவிக்கும் முனைப்பில் சதத்தை கொண்டாடாத கவுர் appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரன் குவிக்கும் முனைப்பில் சதத்தை கொண்டாடாத கவுர்

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×