Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

இரண்டாவது கருத்துக்கணிப்பு எண்ணத்தை நிக்கோலா கைவிட வேண்டும்: தெரேசா மே

ஸ்கொட்லாந்தில் இரண்டாவது கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டும் எனும் எண்ணத்தை முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜன் கைவிட வேண்டும் என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இங்கிலாந்து பாடசாலை ஒன்றிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது அங்கிருந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்துர் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் உரையாற்றுகையில், “பிரித்தானியாவில் தற்போது நிலவும் சூழ்நிலையை நோக்கும் போது அனைவரும் ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்பது புலனாகின்றது. மாறாக பிரிந்து செல்வது சிறந்ததல்ல. நிக்கோலாவும் இது தொடர்பில் சிந்தித்து சிறந்த அறிவிப்பு ஒன்றினை விடுப்பார் என நான் நம்புகின்றேன்” என தெரிவித்தார்.

இந்நிலையில், பிரெக்சிற் விடயங்கள் தெளிவுபடுத்தப்படும் வரை இரண்டாவது கருத்துக்கணிப்பு தொடர்பான விடயங்கள் கலந்தாலோசிக்கப்படாது என நிக்கோலா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post இரண்டாவது கருத்துக்கணிப்பு எண்ணத்தை நிக்கோலா கைவிட வேண்டும்: தெரேசா மே appeared first on GoldTamil- Tamil Media News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

இரண்டாவது கருத்துக்கணிப்பு எண்ணத்தை நிக்கோலா கைவிட வேண்டும்: தெரேசா மே

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×