Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

தொடரும் கனமழையால் வெள்ளக்காடான மும்பை

தொடரும் கனமழையால் மும்பையில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடரும் கனமழை காரணமாக மும்பை மாநகரமே வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை இரவு கொட்டத் துவங்கிய கனமழை நேற்று மாலை வரை ஓயவில்லை. இதனால் ஒரே நாளில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாக்பூரிலும் மழை தொடருவதால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதுபற்றி பேசிய பொதுமக்கள் நாக்பூரில் இந்தாண்டு பெய்த முதல் மழையே மிககனமழையாக உள்ளதாக குறிப்பிட்டனர். ஆண்டின் முதல் மழைக்கே நாக்பூர் மூழ்கிவிட்டதாக கூறியுள்ள மக்கள், மழையில் சிக்கிய கார் ஒன்றை பற்றியும் காருக்குள் சிக்கியவரை நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்டது பற்றியும் அதிர்ச்சியுடன் விவரித்தனர். ஒரே நாளில் அதிகபட்சமாக ராய்காட்டில் 17 செ.மீ பதிவாகியுள்ளது. கொல்காபூர், ரத்தினகிரி, சந்திராபூர், நாசிக் உள்ளிட்ட நகரங்களும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. மும்பை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மும்பையில் கடல் அலைகளும் நீண்ட உயரத்துக்கு எழுகின்றன. தற்போது நிலவும் வானிலை காரணமாக 4.81 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

The post தொடரும் கனமழையால் வெள்ளக்காடான மும்பை appeared first on GoldTamil- Tamil Media News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

தொடரும் கனமழையால் வெள்ளக்காடான மும்பை

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×