Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

கட்டாரின் வெளியுறவு அமைச்சர் அமெரிக்கா விஜயம்

கட்டாரின் வெளியுறவு அமைச்சர் ஷெய்க் மொஹமட் பின் அப்துல்ரஹ்மான் அல் தானி (Sheikh Mohammed bin Abdulrahman Al Thani) மற்றும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டன் டி.சியில் இடம்பெற்றுள்ளது. சவூதி உள்ளிட்ட நான்கு நாடுகள் கட்டார் மீதான உறவுகளை முறித்துக் கொண்டுள்ள ஒரு இக்கட்டான சூழ்நிலையிலேயே ஷெய்க் மொஹமட் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

எனினும், முறிவடைந்த உறவுகளை மீண்டும் புதுப்பிப்பது தொடர்பில் சவூதி அரேபியா, அமெரிக்கா, பஹ்ரேன், மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் 13 நிபந்தனைகளை விதித்தன.

அவ்வாறு விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் அல் ஜசீரா தொலைக்காட்சி மூடப்பட வேண்டும், ஈரானுடனான உறவுகள் குறைத்துக் கொள்ளப்பட வேண்டும் மற்றும் கட்டாரில் உள்ள துருக்கி இராணுவத் தளம் மூடப்பட வேண்டும் என்பன உள்ளடங்கும்.

எனினும், குறித்த நிபந்தனைகளுக்கு ஒருபோதும் உடன்பட முடியாது என கட்டார் பதிலளித்தது. மேற்படி நிபந்தனைகள் கட்டாரின் இறைமையை பாதிக்கும் வகையில் உள்ளது எனவும் அதனால் அந்த நிபந்தனைகளை ஏற்க முடியாது எனவும் கட்டார் விளக்கம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post கட்டாரின் வெளியுறவு அமைச்சர் அமெரிக்கா விஜயம் appeared first on GoldTamil- Tamil Media News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

கட்டாரின் வெளியுறவு அமைச்சர் அமெரிக்கா விஜயம்

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×