Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

மெக்காவை குறிவைத்து மனித வெடிகுண்டு தாக்குதல்

இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்கா மசூதியை குறி வைத்து தாக்குதல் நடத்திய பெண் உள்பட 5 நபர்களை சவூதி போலீஸ் கைது செய்துள்ளது. சவூதி அரசின் பாதுகாப்புத்துறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி மெக்கா மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்ததை அடுத்து ரியாத் நகரப் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இதுகுறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மசூதியை 3 தீவிரவாத கும்பல்கள் தாக்குவதற்கு சதித்திட்டம் தீட்டியிருப்பதாகவும், இரண்டு குழுக்கள் மெக்காவிலும், ஒரு குழு ஜெட்டாவிலும் இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் உஷார் படுத்தப் பட்டனர். இதை தொடர்ந்து மெக்காவை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது மெக்கா மசூதி அருகிலுள்ள ஒரு வீட்டில் தீவிரவாதி பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவனை போலீசார் சுற்றி வளைத்தனர். இதில் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட தீவிரவாதி மீது போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். அடுத்த சில நிமிடங்களில் தீவிரவாதி அவனது உடம்பில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இந்த சம்பவத்தில் 5 போலீசார் மற்றும் 6 பொதுமக்கள் காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் போலீசார் அங்கு நடத்திய தேடுதல் வேட்டையில் ஒரு பெண் உள்பட 5 பேரை கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ரம்ஜான் நேரம் என்பதால் மெக்காவில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

The post மெக்காவை குறிவைத்து மனித வெடிகுண்டு தாக்குதல் appeared first on GoldTamil- Tamil Media News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

மெக்காவை குறிவைத்து மனித வெடிகுண்டு தாக்குதல்

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×