Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

இந்திய அணி 281 ரன்கள் குவிப்பு

இங்கிலாந்து, வேல்சில், பெண்களுக்கான 11வது ஐ.சி.சி., உலக கோப்பை தொடர் நடக்கிறது. டெர்பியில் இன்று நடக்கும் லீக் போட்டியில் இங்கிலாந்து, இந்தியா அணிகள் மோதுகின்றன. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

அபார துவக்கம்:

இந்திய அணிக்கு பூணம் ராத், சிம்ரிதி மந்தனா ஜோடி அபார துவக்கம் தந்தது. புரூன்ட் பந்தில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்த மந்தனா, 45 பந்தில் அரைசதம் கடந்தார். இவருக்கு சிறப்பான ஒத்துழைப்பு தந்த பூணம் ராத்தும் அரை சதம் அடித்தார்.

மிதாலி அரை சதம்:

முதல் விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்த போது, மந்தனா (90) அவுட்டானார். பூணம் 86 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ரன் குவித்த கேப்டன் மிதாலி அரை சதம் விளாசினார். இவர் 71 ரன்களில் அவுட்டானார். இந்திய அணி 50 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 281 ரன்கள் எடுத்தது. ஹர்மன்பிரீத் (24) மட்டும் அவுட்டாகாமல் இருந்தார்.

The post இந்திய அணி 281 ரன்கள் குவிப்பு appeared first on GoldTamil- Tamil Media News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

இந்திய அணி 281 ரன்கள் குவிப்பு

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×