Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

இந்திய பெண்கள் அணி ‘பேட்டிங்’

இங்கிலாந்துக்கு எதிரான பெண்கள் உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி முதலில் ‘பேட்டிங்’ செய்கிறது.

இங்கிலாந்து, வேல்சில், பெண்களுக்கான 11வது ஐ.சி.சி., உலக கோப்பை தொடர் நடக்கிறது. டெர்பியில் இன்று நடக்கும் லீக் போட்டியில் இங்கிலாந்து, இந்தியா அணிகள் மோதுகின்றன. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. இதனையடுத்து மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, முதலில் ‘பேட்டிங்’ செய்கிறது.

ஆஸி., ஆதிக்கம்

ஐ.சி.சி., பெண்கள் உலக கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலிய அணி, அதிகபட்சமாக 6 முறை (1978, 1982, 1988, 1997, 2005, 2013) கோப்பை வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இங்கிலாந்து 3 (1973, 1993, 2009), நியூசிலாந்து ஒரு முறை (2000) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.

* ஒரே ஒரு முறை (2005) பைனல் வரை சென்ற இந்தியா, 2009ல் மூன்றாவது இடம் பிடித்தது. இரண்டு முறை (1997, 2000) அரையிறுதியோடு திரும்பியது.

இந்தியா – பாக்., மோதல்

ஐ.சி.சி., பெண்கள் உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் இன்று இங்கிலாந்தை சந்திக்கிறது. பின், வெஸ்ட் இண்டீஸ் (ஜூன் 29), பாகிஸ்தான் (ஜூலை 2), இலங்கை (ஜூலை 6), தென் ஆப்ரிக்கா (ஜூலை 8), ஆஸ்திரேலியா (ஜூலை 12), நியூசிலாந்து (ஜூலை 15) அணிகளுடன் மோதுகி்றது.

மூன்றாவது முறை

ஐ.சி.சி., பெண்கள் உலக கோப்பை தொடரை இங்கிலாந்து, மூன்றாவது முறையாக (1973, 1993, 2017) நடத்துகிறது. இதன்மூலம் இத்தொடரை அதிக முறை நடத்திய நாடுகளுக்கான பட்டியலில் முதலிடத்தை இந்தியாவுடன் (1978, 1997, 2013) பகிர்ந்து கொண்டது. நியூசிலாந்து (1982, 2000), ஆஸ்திரேலியா (1988, 2009) தலா 2, தென் ஆப்ரிக்கா ஒரு முறை (2005) இத்தொடரை நடத்தின.

ரூ. 4.26 கோடி பரிசு

பெண்கள் உலக கோப்பை தொடரில் கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 4.26 கோடி பரிசுத் தொகை கிடைக்கும். பைனலில் தோற்கும் அணி ரூ. 2.13 கோடி பெறும். அரையிறுதியில் தோற்கும் அணிகள் தலா ரூ. 1.07 கோடி கொண்டு செல்லும். லீக் சுற்றுடன் திரும்பும் நான்கு அணிகளுக்கு தலா ரூ. 20 லட்சம் தரப்படும். தவிர, லீக் சுற்றில் பெறும் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ. 13 லட்சம் கிடைக்கும்.

மிதாலி கோபம்

இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் பத்திரிககையாளர் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது, உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, மிதாலி ஆவேசமாக கூறுகையில்,‘‘ உங்களுக்கு பிடித்த பெண் கிரிக்கெட் வீராங்கனை யார் என வீரர்களிடம் கேட்க முடியுமா. ஆண்கள் கிரிக்கெட்டிற்கும், எங்களுக்கு அதிக பாரபட்சம் காட்டப்படுகிறது. ‘டிவியில்’ கூட நேரலை செய்வது இல்லை. தற்போது, இதில் இந்திய கிரிக்கெட் போர்டு மாற்றம் செய்துள்ளது,’’ என்றார்.

The post இந்திய பெண்கள் அணி ‘பேட்டிங்’ appeared first on GoldTamil- Tamil Media News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

இந்திய பெண்கள் அணி ‘பேட்டிங்’

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×