Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

என் மனைவியின் பொன்விழாக்கவிதை !!!!!!!!!!!

My Family

கடந்த நவம்பர் 5ஆம் தேதி என் மனைவியின் ( ரூத் எலிசபெத் )பொன் விழா இம்மானுவேல் தமிழ்த்  திருச்சபையில் , ஆயர் அறிவர் ஜான்சன் ரெத்தினசாமி தலைமையில் சிறப்பாக நடை பெற்றது .குடும்ப உறுப்பினர்கள் ஆலய நண்பர்கள் தவிர சிறப்பு அழைப்பாளர்களாக நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
With Pastor Johnson Family

அப்போது விழாவின் முக்கிய நிகழ்வாக ,   நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் கவிஞர் சிவபாலன் அவர்கள் ஒரு சிறப்பான கவிதையை வாசித்து அளித்தார் .இதோ அந்தக்கவிதை உங்களுக்காக .
 
Sivabalan Kavithai
     பொன்விழா வாழ்த்து!
அறுநூறு  நிலவுகளைப் பார்த்தது ஒரு நிலவு! . அது
அரை நூற்றாண்டு கண்டது எமக்கு மகிழ்வு!
கால் கட்டுப் போட்டது கல்யாண உறவு! -  அதுவும்
கால் நூற்றாண்டு  கொண்டதில் இன்பமும் வரவு!

பொன் விழா! வெள்ளி விழா! - என்றும்
இவர் வாழ்வில் திருவிழா!
இவ் வருடம் இவருக்கோ
இரண்டு விழா! - அதனால்
இடைவிடாதசுற்றுலா!
இடையில்,
இருவருக்கும்கிடைத்ததும்
இரண்டு வெண்ணிலா!
இல்லறத்தில்அன்போ வேர்ப்பலா!

இறைவன், இவரை,
இவர் தாய் கையில் கொடுத்து ஐம்பது ஆண்டாச்சு!. – இவரோ
இவர் கணவர் கை பிடிச்சு இருபத்தி  அஞ்சாச்சு!.
இணைந்த உறவுகளும்இப்போ பெரிசாச்சு!
இடமும், புலம் பெயர்ந்த நிலமாச்சு!

with Sivabalan Family

வடிவில் மயங்கும் வண்ணத்துப் பூச்சி,
படிவில் தோன்றும் வைரத்து கற்கள்,
செடியில்பூக்கும் செம்பகப் பூக்கள்,
கொடியில்தூங்கும் கோவைப் பழங்கள்.,
இயற்கையில்இவை எல்லாம்அழகு!
இதை விட, இவர் மனமோ பேரழகு!

சிரித்த முகம், சீரான பார்வை
சிறப்பானநட்பு  - நீர்
சிங்கார நாட்டு இளவரசி! - உம்
சிறு விரல்  பட்டாலே
சுவைக்கும்நெல் அரிசி!
செம் பொன்னும் பார்க்குமாம் தமை உரசி!
இருந்தும், உமக்கு
எப்படிக்கிடைத்தார்  இந்தப் பரதேசி?

பண்பும், பண்பாடும் இவர் செயல் வடிவில்!
அன்பும் அனுபவமும்  தாய் வடிவில்!
அகிலம் விழிப்பதோ காலை விடிவில்!
அனிசா,…. அபிசா…. விழித்ததோ இவர் மடியில்!

With Current President Ranga family

கார்த்திகையில் பூப்பது
கார்த்திகைப்பூக்கள்!
இங்கே,
கார்த்திகைப்பூவில்
பூத்தது
இரண்டு ரோஜாப் பூக்கள்!

ஐப்பசியில்மழை வர,
வீசும் ஆடியில் காத்து!
அந்நீர் ஓட,
வளரும் வயலில் நாத்து!
ஆதவன் வரவால்


This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

என் மனைவியின் பொன்விழாக்கவிதை !!!!!!!!!!!

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×