Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

சூழல் - சிறுகதை

இரவு 8:20 மணி அந்த தெருவில் மயான அமைதி காற்றுக்கூட வீசாத அமைதி தூரத்தில் புகைவிட்டு கொண்டிருந்தது சாம்பலாகப் போகும் குப்பை.. பட பட படவென சிரத்தையான சப்தமொடு சில்லிட்டு கிடந்த இருளில் பால்நிறத்தில் வந்து நின்றது அந்த ஜாக்குவார் 380. நிலவு தன் நிறத்தை ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருக்கையில் இன்ஜின் அணைக்கப்பட்டு.. 


வளையல் போல வளைந்த மரத்தில் மேகத்து தூறல்போல்  சருகுகள் சிந்தின .

அந்த சருகுகளை சரசரவென உரசியது நான்கு கால்கள். 6 அடி வெளுத்த கட்டுமஸ்தான தேகத்தில் வெள்ளை கோட் சூட்டுடன் முழுபோதையில் இருந்தான் ஹரி 29 வயதில் கணக்கிலில்லா பணம் சேர்த்த பணக்காரன்.. 


அங்கு ஒரு பில்டிங். பங்களா போன்ற பில்டிங். இருளில் பாதிப்பாதியாக தெரிந்தது .. போதையினால் நிலையின்றி பங்களாவிற்குள் சென்றான் ஹரி . அவனை தடுத்தபடியே சென்றேன் நானும். பங்களாவிற்குள் சென்றவுடன் கொஞ்சமே குடித்திருந்த எனக்கு பயம் தொற்றிக் கொண்டது. அதனால் ஹரியை இழுத்து இழுத்து பார்த்தும்அவன் வருவதாய் இல்லை. மேலும் உள்ளே சென்றான். அங்கு நகர்ந்ததும் நுழைவு வாயில் கதவு தானாக பூட்டிக் கொண்டது.. பின்னர்  எனக்கு மேலும் பயம் அதிகமானது. அந்த இருண்ட பங்களாவில்.. புகை நாற்றமும் கண் எரிச்சலும் உணர்ந்த போது ஏதோ வழி திறந்திருக்கும் என்று தேடியபடி என் மொபைலில் டார்சை கொண்டு பார்த்துக்கொண்டே நடந்தேன். சிறிது தூரத்தில் ஒரு ஜன்னல் திறந்திருப்பது தெரிந்தது. அந்த ஜன்னல் வழியாக ஏதோ எரிவது போல் தெரிய ஜன்னலை நெருங்கிப் பார்த்தேன் அங்கொரு மனித உடல் நின்றபடி எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியிலும் பயத்திலும் உறைந்தேன். 


உடனே ஹரியை கூட்டிக் கொண்டு தப்பிக்க ஓட நினைத்து ஓட. ஹரியை காணவில்லை பயம் இன்னும் அதிகரித்தது மனம் ஏதேதோ நினைத்து நடுங்கியது.  நடுங்க நடுங்க ஹரியை தேடி அலைந்தேன். ஹரி ஹரி என்று கூப்பிட்டபடி நகர்ந்தேன். கீழே எங்கேயும் காணவில்லை என்பதால் மாடிக்கு படி ஏறும்போது உபரியாக காலடி சத்தம் கேட்க . பயத்தில் திரும்பலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இன்னும் மூன்று படி ஏற மேலும் காலடி சப்தம் கேட்க திரும்பி பார்க்கையில் என் எதிர் நானே இருக்க பதட்டத்தில் காலிடறி கீழ விழ படிகளில் உருண்டு தரையில் ஒரு மூலையில் போக பக்க ஒரு கரம் தொட்டது போல உணர்ந்து நடுங்கியபடி திரும்ப ஹரி தரையில் விழுந்து கிடந்தான். ஹரி ஹரி என்று உலுக்கியும் அசைவற்று கிடந்தான். என்ன செய்ய என்று தேடி  அருகே கிடைத்த தண்ணீர் பாட்டல் எடுத்து முகத்தில்ஊற்றி அவனை போதையிலிருந்து தெளிய வைத்தேன். .


இருந்தும் சரியான தெளிவில்லாமல் உளறியபடி பின்னே வந்தான். மாடியில் யாரோ ஒரு பெண் காப்பற்ற சொல்லி அலறும் சப்தம் கேட்டு. நானும் ஹரியும் மாடிக்கு படியேறி செல்லும் போது. அருண் ஆ ஊ என போதையில் கத்திக்கொண்டே வந்தான். மாடிக்கு சேர 5 படிகள் இருக்கும் போது கீழே பெரிய பெரிய பொருட்கள் விழுந்து உடைவது போல சப்தம். மேலே அலறுபவளை காப்பாற்றப் போவதா? கீழே உடைவதை பார்க்கப் போவதா?  இல்லை முதலில் நாம் தப்பிக்க ஓடுவதா? என குழம்பிக் கிடக்கையில் பொருட்களை விட மனித உயிர் முக்கியமென அலறல் கேட்கும் இடம் நோக்கி நகர்ந்தேன். 


மேல் மாடியில்இரண்டு அறைகள் இரண்டும் தேக்கு மரத்தால் செய்த கதவுகள் அதில் தங்கநிறத்தில் ஏதோ ஒரு உருவம் பதிக்கப்பட்டிருந்தது.. அந்த உருவத்தை தொட்டு கதவை திறந்தபோது அறை வெளிச்சத்தில் ஒரு கட்டில் மெத்தையில் கரிய உருவம் சரியாக தெரியாத போதிலும் அறைகுறையாக தெரிந்தது. அந்த உருவம் ஓலமிடுவது போல இருந்தது. நானும் ஹரியும் பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்க.. கீழே டம் டம் டம் என்று சப்தம். குழப்பம் பயம் வேட்கை தப்பிக்கும் அவசியம் என பலப்பல விதமான எண்ணங்கள் எங்களை உலுக்கிட ஏதோ விபரீதமாக பட்டது ..


அப்போது அந்த கரிய உருவம் நெருங்கி வந்து ஹரியை பிடித்துக் கொண்டது. பயத்தில் .ஹரி கத்தக் கத்த அந்த உருவமும் அலற .. உச்சகட்ட போராட்டமாய் ஹரியை காப்பாற்றும் முயற்சியில் நானும் ஹரியும் இருக்க. அபரிதமாய் தப்பித்து ஓடி கீழே வந்தோம். வந்தபோது நாற்காலி அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தது. நடுங்கி நின்றிருந்த போது அந்த நாற்காலியில் ஹரியின் உடல் வந்து விழுந்தது. மிகவும் பயந்துபோன நான் திரும்பி பார்த்த போது ஹரியும் பயந்து வெளிரிப்போய் தான் இருந்தான் .. 


இன்னும் வெளியே ஓட முயன்றோம்.. அங்கே கதவினை திறக்க முடியாமல் திணறினோம் அப்போது அங்கே அந்த கரிய உருவமும் எரியும் உடலும் எங்களை நெருங்கி நெருங்கி வந்தது .. அந்த எரியும் உருவம் ஹரியை பிடித்துக் கொண்டது. அந்த கரிய உருவம் என்னை ஓங்கி அறைந்தது நான் அங்கேயே மயங்கி விட்டேன்..  அதற்குமேல் என்ன நடந்தது என்று தெரியவில்லை.. 


என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அர்ஜுனின் வாக்குமூலத்தை நானும் இன்ஸ்பெக்டர் வஜ்ரவேலும் கேட்டுக் கொண்டிருந்தோம்... 


என்ன வஜ்ரவேல் ரொம்ப  சினிமாத் தனமா இருக்கே.  என்றேன் நான்.. பவித்ரன் என்னும் நான். 


என்ன பண்ணலாம் பவி ? எப்படி சால்வ் பண்றதுனே புரியல.. 


வஜ்ரவேல் இங்க ஒருத்தனோட பார்வை மட்டும் தான் இருக்கு மேற்கொண்டு நடந்தத சொல்லுங்க. நீங்க எப்படி இந்த கேஸ்ல வந்தீங்க என்ன கவனிச்சீங்க.  எல்லாம் சொல்லுங்க.. 


பவி இந்த கேஸ இப்படி ஸ்டேட்மண்ட் எழுதினா என்னைய பார்த்து டிப்பார்மெண்டே சிரிக்கும்..  அதனால தான் உங்க ஹெல்ப் கேட்டு வந்துருக்கேன்.. 


சரி வேற தகவல்கள் உங்களுக்கு தெரிஞ்சி எதாவது?. இருக்கா வஜ்ரவேல் .எனக்கு இங்க முழுசா விசயமே வரல.. 


சொல்றேன் என் டி சி கார்டன் ன்னு என் சர்க்கிள்ள ஒரு பங்களா இருக்கும் மொத்தம் 30 ஆயிரம் ஸ்கொயர் பீட்ல பின்னாடி பார்க் மாதிரி கட்டி முன்னாடி வீடு சிங்கிள் காம்பவுண்ட்ல.. அங்க போன வெள்ளிக்கிழமை ராத்திரிதான் இவங்க அங்க போயிருக்காங்க. காலைல கார பார்த்து நம்ம ஹெட் கான்ஸ்டபிள் தான் தகவல் சொன்னாரு. நாங்க ஒரு டீமோட அந்த பங்களாவுக்கு உள்ள போய் பாத்தா அர்ஜுன் மயக்கத்துலயும். ஹரி தலைய தவிர மீதியெல்லாம் எரிஞ்சு போயும்இருந்தாங்க. அர்ஜுன ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டோம். ஹரியோட பேமிலிக்கு சொல்லி அனுப்பிட்டோம்.. பணக்கார வீட்டு பையன் டிப்பார்ட்மெண்ட்ல ப்ரசர் ஜாஸ்தி . அதான்.. 


சரி இத சால்வ் பண்ணா எனக்கு என்ன தருவீங்க?. 


என்ன ? கவர்மண்ட் ஷீல்ட் ரிவார்ட் தருவோம்.. 


அதெல்லாம் வேணா என் ப்ரண்டஸ் கூட ஒரு தமிழ்நாடு டூர்  .செலவு உங்களுது எப்படி?.


அவ்ளோதானா தாராளமா செஞ்சிடலாம்.. 


நானும் இன்ஸ்பெக்டர் வஜ்ரவேலும் கான்ஸ்டபிள் 2 பேரும் அந்த பங்களாவிற்கு சென்றோம்.. 


வஜ்ரவேல் சரியா அந்த கார் நின்ன இடத்துல நம்ம ஜீப்ப நிறுத்துங்க.. என்றேன்.


சரி என்று நிறுத்தினார் கான்டபிள் . நான் இறங்கி அந்த பங்களாவை நோட்டம் விட்டேன் மாலை 5:20 மணி இருக்கும் பங்களாவிற்கு பின்னே சூரியன் ஔிந்து கொண்டிருந்தது.. பங்களா எந்தவிதத்திலும் ஒரு அமானுஸ்யத்தை காட்டும் விதமாக இல்லாவிட்டாலும். அது ஒரு மர்மத்தை வைத்திருப்பதை போல நிற்கிறது.. உடன் வந்த அனைவரும் பங்களாவை நோக்கி செல்ல அந்த  பங்களாவின் மேல் மாடியில் வலதுபுறத்து அறையில் இருகண்கள் என்னை கூர்ந்து பார்ப்பது போல தெரிந்தது.. எனினும் இதுபோன்ற எண்ணங்கள் சிலநேரம் கோயில் கோபுர சிற்பங்களை காணும்போதும் தோன்றியிருக்கிறது.. 


அருகில் இருக்கும் வீடுகளை நோட்டம் விட்டேன்  .. எல்லாம் இயல்பாகவே இருந்தது அர்ஜுன் சொன்னது போல அமானுஸ்யங்கள் ஏதும் இருப்பதாக இருந்தால் இப்படி சாதாரணமாக இருக்க முடியுமா? .. என்னைகடந்து சென்றவரை சார் என்று அழைத்தேன் . அவரது டீசர்ட்டும் ஷார்ட்ஸூம் ஜாக் ஷூஸும் கழுத்தில் இருந்த ப்ளூடூத்  டிவைசும் அவரின் 59 வயதினை முடிந்தளவு மறைத்தது.. சார் என்று கூப்பிட்டேன்.


ஏனோ அவரிடம் என்னை காட்டிக்கொள்ள விரும்பவில்லை.. காரணம். நம்மில் பலர் அறிமுகம் இல்லா நபரிடம் தரும் உண்மையை போலீசிடமோ இல்லை என்னை போன்ற டிடெக்டீவிடமும் சொல்வது இல்லை. எங்களின்  சந்தேகப் பார்வையும் ஒரு காரணம்.. மற்றொன்று இந்த வயதினரிடம் கேள்வியால் சரியான விடையை பெறுவது சிரமம் என்பதும்.. 


சார் என்ன இந்த பில்டிங்க்ல ஒரே போலீஸ் கூட்டமா இருக்கு? என்று கேட்டேன்..


அதுவா  போன சனிக்கிழமை இந்த வீட்டுல ஒரு கொலை நடந்துருச்சி .. அத விசாரிக்கத்தான் தெனமும் போலீஸ் இப்படி வந்து போறாங்க.. 


கொலையா எப்படி?.. 


ஏதோ இந்த வீட்டுல பேய் இருக்குறதா அக்கம் பக்கத்துல பேசிக்கிறாங்க . 


ஏன் சார் வீட்டப் பாத்தா அப்படி ஒன்னும் பேய் வீடுமாதிரி தெரியலயே. ?


இல்லப்பா இங்க ஒரு பத்து வருசத்துக்கு முன்னாடி ஒரு குடும்பம் இருந்துச்சி அந்த குடும்பத்துல ஒரு அழகான பொண்ணு 20 23 வயசு இருக்கும். அதே அந்த மாடில ஒரு ஜன்னல் இருக்கில்ல அங்கிருந்து விழுந்து செத்துப் போச்சி.. அதுக்கப்புறம் அந்த குடும்பத்துக்கு இங்க எதுவும் சரியா இல்லஅதனாலயே அந்த குடும்பம் இந்த வீட்ட விட்டுட்டு வெளியூர் போய்டாங்க.. இப்ப இந்த வீட்டுல சுப்பையான்னு ஒருத்தன் தான் பாத்துக்குறான் .. என்னவோ தெரியல அவனும் சில நாளா ராத்திரியில இருக்குறதில்ல. 


இவரோடு பேசிக் கொண்டிருக்கும் போதும் சில முறை அந்த மாடி ஜன்னலை கவனித்தேன் அதே கரிய உருவம் கண்கள் என்னை பார்ப்பது போன்ற உணர்வு இந்த முறை பிரமை என்று கடந்துவிட முடியவில்லை.. 


பங்களாவின் வாசலில் இருந்தவஜ்ரவேல் பவி அங்க என்ன பன்ற இங்க வா என்றார். 


அந்த பெரியவர் சற்று அதிர்ச்சியும் ஆச்சரியமும் கொண்டு என்னை பார்த்து நீ .. நீங்க யாரு என்றார்.. 


பயப்படாதீங்க நான் வெறும் டிடெக்டீவ் தான். 


அவர் சிரித்துக் கொண்டே நான் ஏன் பயப்படனும் என்று என் தோளில் தட்டியபடி மறைந்து போனார்.. 


ஒரு நொடி நான் முழுதுமாக அதிர்ச்சியில் உறைந்து போனதை வஜ்ரவேல் உலுக்கிய பின் தான் உணர்ந்தேன் ... 


என்ன ரொம்ப நேரமா அங்கயே பார்த்துட்டு இருக்க ? அங்க என்ன இருக்கு ? என்றார் வஜ்ரவேல்..


ம்ம் ஒன்னுமில்லை என்று என்னை நானே சுதாரித்து கொண்டு பங்களாவுக்குள் நுழைந்தேன்  .. அர்ஜூன் சொன்னது போலத்தான் இருந்தது எல்லாம். அவன் சொன்ன ஜன்னலை சென்று பார்த்தேன் அங்கே ஒரு பார்க் போல மணல் கொட்டி விளையாட்டு பொருட்களுடன் இருந்தது.. அங்கேயே வெறித்து பார்த்தபடி.. சிந்தனையில் மூழ்கினேன்..


அந்த மாடி ஜன்னலில் உள்ள உருவம் கண்கள்?. வந்த அந்த பெரியவர் சட்டென மறைந்தது. ஏதும் புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தேன்.. ஒரு ஹாரன் சப்தத்தால் எண்ணம் கலைந்து பார்த்த போது அந்த பார்க் கிரவுண்ட் முடிவில் காம்பௌன்ட்க்கு பின்னால் ஒரு  தெருவின் சாலை இருக்கிறது .. 


திரும்ப வந்து ஹரிஇறந்த இடத்தில் இருக்கும் மார்க்குகளை பார்த்தபடி அந்த அறை முழுதும் பார்வையால் அலசினேன்.. அர்ஜுன் சொன்னது போல எந்த பொருட்களும் சிதறின மாதிரி தெரியல.. ஆனாலும் அந்த ஜன்னல் கண்களும் சந்திந்த பெரியவரும் என்னை உள்ளுககுள் உலுக்கிக் கொண்டே இருந்தன.. 


என்னையே கவனித்து வந்த வஜ்ரவேல் .. பவி நீ வந்ததில இருந்து ஏதோ மாதிரி இருக்கயே என்னாச்சு? உடம்புக்கு எதாவது முடியலயா குடிக்க எதாவது எடுத்துட்டு வர சொல்லட்டா? என்றார்.. அதுவும் சரிதான் யோசித்தால் வேலைக்காகாது அதுமட்டுமில்லாது ஏதேனும் சாப்பிட்டால் தேவலாம் என்றிருந்தது.. (இப்படி தேன்றித்தான் அரசமரத்தடி பிள்ளையாரை விட பெரிய தொப்பை வந்திருக்கு ).. வஜ்ரவேல் ஸ்ட்ராங்கா ஒரு கப் காபி கிடைக்குமா? என்றேன்.. 


616 போய் எல்லாருக்கும் காபி வாங்கிட்டுவா. என்று தன் பர்சிலிருந்து பணத்தை எடுத்து தந்தார் இதிலிருந்தே வஜ்ரவேல் எப்படிபட்டபோலீஸ்காரர் என்று உங்களுக்கு தெரியும்.. 


சூடாய் காபி பருகி கொஞ்சம் சமநிலைக்கு வந்தேன் . வஜ்ரவேல் சில விசயங்கள விசாரிக்கனும்.. என்றேன். 


சொல்லு பவி என்ன விசாரிக்கனும்..?.


இந்த வீட்ட பாத்துகுறதா சொல்லபட்ட சுப்பையா.. ஹரிக்கும் இந்த வீட்டுக்கும் ஏதாச்சும் பழைய தொடர்பு. அர்ஜுன் ஹரி நட்பு.  இந்த தெருவோட சிசிடிவி பூட்டேஜ் கடைசி 4 மாசத்துக்கு. இங்க எதாவது கைரேகை . ஹரிக்கு ஆகாதவங்க பத்தின லிஸ்ட் . சோ அன் சோ..  என்றேன்.. 


சொன்னதையெல்லாம் 432 கான்ஸ்டபிள் நோட் பண்ண அதனை வாங்கி பார்த்த வஜ்ரவேல்.. ஒவ்வொன்றாக பதில் தேட.. 


பவி . கம்ப்ளைட் வந்த அன்னக்கே பாத்துட்டோம் அர்ஜுன கைரேகைய தவிர யாருதும் இல்ல . ஏன் .ஹரியோடது கூட இல்ல.. 


என்ன ஹரி கைரேகை கூட இ்ல்லையா ரிமார்க்பிள். முதல் முறையா கொலையானவனின் கைரேகை கூட இல்லாம ஒரு கேஸ்.. என்றேன்.


அடுத்து 2 வார சிசிடிவி பார்த்துட்டேன் எதும் சந்தேக படுற மாதிரி யில்ல.. 


வஜ்ரவேல் இதுவரை நாம கொலைனு தான விசாரிக்குறோம்... அப்புறம் எப்படி 2 வார சிசிடிவி பார்த்த போதும் அட்லீஸ்ட் 2 மாசமாவத வேணாமா .?.


சரி பாக்க சொல்றேன் பவி.. 


சரி அர்ஜுன் ஹரி பத்தி கேட்டது ?.


அர்ஜுன் ஹரி ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் எப்பவுமேஒன்னா இருப்பாங்க.. ஒன்னா சுத்துவாங்க .. இப்படிதான் கிடைச்சது பவி.. 


அடுத்து இந்த வீட்டக்கும் அவங்களுக்குமான பழைய தொடர்பு.. ?. 


அப்படி ஏதும் இல்லையே இத ஏன் கேக்குற.  பவி ?.


இவ்ளோ போதையிலும் இங்க சரியா வந்துருக்கான்னா.. அர்ஜுன் தடுத்தும் உள்ள போயிருக்குறான்னா? பழக்கம் இல்லாமலா வஜ்ரவேல்.. 


அதுவும் சரிதான் பவி ஆன எந்த தொடர்பும் இல்லயே ஏன் இது ஒரு தற்செயலா இருக்கக் கூடாது?.. 


சரி அப்ப அந்த சுப்பையா ?. 


யாரு சுப்பையா நான் விசாரிச்ச வரையில அப்படியாரும் இல்லையே.. 


என்மனம் அந்த பெரியவர் சொன்னதை நம்பலாமா வேணாமா என்றிருந்தது .. எதுக்கு இன்னும் க்ளியரா விசாரிச்சுடுங்க வஜ்ரவேல் என்று நகர்ந்தேன்  . 


அப்போது ஒரு பெண்ணின் அழுகை சப்தம் கேட்டது . நான் வஜ்ரவேல் கான்ஸ்டபிள் 4 பேர் என எல்லோருக்கும் கேட்டது.. அந்தமாடி ஜன்னல் அறைக்கு ஓடினேன் அந்த கதவை திறக்க முடியவில்லை. கான்ஸ்பிள்களை விட்டு உடைத்து திறந்த போதுஅங்கு ஒரு கட்டில் மெத்தையும் ஒரு கப்போர்டும் அந்த ஜன்னலும்  மட்டுமே இருந்தது.. நான் மெல்ல மெல்ல சென்று அங்கிருந்த கபோர்டை திறந்தேன் அதனுள் ஒரு கரிய உருவம் முன்பு பார்த்த கண்கள் என என்னை தூக்கிவாரி போட்டது . நான் சிலைத்து போய் நிற்க நெருங்கிய கான்ஸ்டபிளும் வஜ்ரவேலும் அந்த உருவத்தை கண்டு அதிர்ச்சியாக அது ஒரு ஓலமோடு புகைந்து மறைந்தது. 


அனைவருக்குள்ளும் அச்சம் பற்றி எரிந்தது. வஜ்ரவேல் கேசை மூடிவிடலாம் என்றார். கான்ஸ்டபிள் வாங்க ஓடிவிடலாம் என்றார். வேண்டாம் இன்னிக்கி நைட் இங்கயே இருக்கலாம்  என்றேன்.. 


அனைவரும் முதலில் மறுத்தனர் பின்பு சம்மதித்தனர்.. ஒருவழியாக இரவு இங்குதான் என்றானபின் வஜ்ரவேல். யோவ் 309 நீபோய் எல்லாருக்கும் டிபன் வாங்கிட்டு வா என்று பணத்தை கொடுத்தார். அதில் 3 நோட்டுகளாக 500 ரூபாய் இருந்தது.  ஆறு பேருக்கு 500 ரூபாய் ஆகும் என்றால் சரவணபவன் போன்ற பெரிய கடையாக இருக்குமென நினைத்தேன் . ஆனால் ரோட



This post first appeared on Writer Pavithran Kalaiselvan, please read the originial post: here

Share the post

சூழல் - சிறுகதை

×

Subscribe to Writer Pavithran Kalaiselvan

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×